உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைவருக்கும் தரமான குடிநீர் சொன்னோம்... செய்கிறோம்! முதல்வர் ஸ்டாலின்

அனைவருக்கும் தரமான குடிநீர் சொன்னோம்... செய்கிறோம்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: அனைவருக்கும் தரமான குடிநீர் சொன்னோம், செய்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது;செம்பரம்பாக்கத்தில் இருந்து, சென்னை மாநகருக்கு நாளொன்றுக்குக் கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகத்தைத் தொடங்கி வைத்தேன்,இதனால், சென்னையின் அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார் மண்டலங்கள், தாம்பரம் மாநகராட்சியின் குன்றத்தூர் மற்றும் திருப்பெரும்புதூர் நகராட்சிகளில் உள்ள 20 இலட்சம் பொதுமக்கள் பயன்பெறப் போகின்றனர். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்ததையும், பின்னர் அந்த திட்டத்தின் வீடியோ ஒன்றையும் முதல்வர் ஸ்டாலின் தமது தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Saran
செப் 21, 2025 21:22

Which drinks are you talking about???


N S
செப் 21, 2025 20:31

அங்கே ஒருவர் உண்மையை போட்டு உடைக்கிறார். "தமிழகத்தில், 90 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு தரப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களை தி.மு.க., அரசு முறையாக செயல்படுத்தவில்லை." உண்மையாக கிராமங்களில் இணைப்புகள் தரமற்றவையாக இருப்பதும், தண்ணீர் கொடுக்க இயலாமையும், அப்பாவுக்கு தெரியாது. ....


SENTHILKUMAR
செப் 21, 2025 19:53

எங்க ஊர்ல வந்த தண்ணியும் வரல வரி மட்டும் வந்திருக்கு


sankaranarayanan
செப் 21, 2025 19:53

அனைவருக்கும் தரமான குடிநீர் சொன்னோம்... செய்கிறோம் முற்றிலும் உண்மை தெருவிற்கு தெரு சாராயக்கடை துவங்கி சாராயநீர் வியாபாரம் வெகு ஜோராகவே போய்க்கொண்டிருக்கிறது இரவு நேரங்களில் கிராமங்களிலும் ஆங்காகாங்கே குடித்துவிட்டு ஆண்கள் தெருக்களில் புரண்டுகொண்டிருக்கின்றனர் பெண்கள் தங்களது தாலியும் இல்லாமல் கணவரும் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர் அரசு கண்டுகொள்வதே கிடையாது மேன் மேலும் சாராயக்கடைகள்தான் துவக்கப்படுகின்றன.


என்றும் இந்தியன்
செப் 21, 2025 18:41

அனைவருக்கும் "கீழ்த்"தரமான குடிநீர் சொன்னோம்... செய்கிறோம் முதல்வர் ஸ்டாலின் இது தான் உண்மை அர்த்தம்


raja
செப் 21, 2025 11:16

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டியாச்சு...


Kjp
செப் 21, 2025 11:10

ஐந்து மருந்தியல் கல்லூரிகளுக்கு நான்கு பேராசிரியர்கள். 327 அரசு பள்ளிகள் மூடப்பட்டுவிட்டது. நான்கரை ஆண்டுகளாகியும் நீட் தேர்வு இன்னும் ரத்து செய்யவில்லை. தாலிக்கு தங்கம் ஏழைகளுக்கு கொடுக்கும் திட்டம் ரத்து. 2021 இல் அரிசி விலை கிலோ 40 ரூபாய். இப்போது கிலோ ரூ 100 ரூபாய். கடந்த ஆட்சியில். மின் கட்டணம் சொத்துவரி மிகவும் குறைவு. பத்திரப்பதிவு கட்டணம் தாறுமாறு. எடப்பாடி ஆட்சியில் இன்னும் பல நன்மைகள் மக்களுக்கு கிடைத்து வந்தது. இப்போது சொல்லுங்கள் எந்த ஆட்சி வேண்டுமா? அல்லது அந்த ஆட்சி வேண்டுமா?


SIVA
செப் 21, 2025 10:59

ஐயோ தலைவரே அவங்க டாஸ்மாக் பத்தி சொல்லல நீங்க வேற அத நியாபகப்படுத்தி விட்றாதீங்க ....


நிக்கோல்தாம்சன்
செப் 21, 2025 09:57

வீராணம் ஏரியின் பைப்புகள் உங்களின் தரத்தை உறுதி செய்தது, இந்திய முழுதும் RO பிளான்டுகள் தரமான குடிநீரை உறுதி செய்கின்றன ஸ்டாலின் அவர்களே. நீங்க என்ன செய்தீங்க என்று தெளிவா சொல்லுங்க பாப்போம்


Vasan
செப் 21, 2025 08:53

2015 ஆம் வருடத்தில், அதிமுக ஆட்சியில், செம்பரம்பாக்கத்தை திறந்து, சென்னையை வெள்ளத்தில் மூழ்கடித்தனர். 2025ஆம் வருடத்தில், திமுக ஆட்சியில், செம்பரம்பாக்கத்தை திறந்து, சென்னை மக்களுக்கு தாக சாந்தி கிடைத்துள்ளது. மக்களே இப்போது முடிவு செய்யுங்கள், நமக்கு யாருடைய ஆட்சி வேண்டுமென்று.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை