உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / படிக்கும் வயசில் படிக்கட்டு பயணம் எதுக்கு; மாணவர்கள் செயலால் டிரைவர்கள் தவிப்பு

படிக்கும் வயசில் படிக்கட்டு பயணம் எதுக்கு; மாணவர்கள் செயலால் டிரைவர்கள் தவிப்பு

திருப்புவனம்: திருப்புவனத்தில் காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் பலரும் படிக்கட்டுகளில் சாகசம் செய்வதால் டிரைவர், கண்டக்டர்கள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மதுரை புறநகர், திருநகர் உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து டவுன் பஸ்கள் மத்திய பஸ் ஸ்டாண்டிற்கு இயக்கப்படுகின்றன. கொத்தங்குளம், வெள்ளிக்குறிச்சி, மேலசொரிக்குளம் , சொக்கநாதிருப்பு, கணக்கன்குடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வரும் டவுன் பஸ்களில் மாணவர்கள் பலர் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்கின்றனர். பக்கவாட்டு கம்பிகளை பிடித்தபடியும், ஒருவர் மீது ஒருவர் ஏறிக்கொண்டும் பயணம் செய்கின்றனர். பஸ்களின் உள்ளே இடமிருந்தாலும் கூட இது தொடர்கிறது.

அடுத்தடுத்து டவுன் பஸ்கள் இயக்கப்பட்டாலும், குறிப்பிட்ட கிராமங்களில் இருந்து வரும் பஸ்களில் மாணவர்களின் அடாவடி செயல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. தட்டி கேட்டால் டிரைவர், கண்டக்டர்களை கூட்டமாக சேர்ந்து மிரட்டுகின்றனர். இதனால் அவர்கள் கண்டு கொள்வது இல்லை. பெற்றோர் கள் கண்டுகொள்வதே கிடையாது. போலீசாரும் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறியது: முன்பெல்லாம் இது போல நடந்தால் கிராமங்களில் கண்டிப்பார்கள். சமீப காலமாக கண்டுகொள்வதில்லை. பஸ்சில் பக்கவாட்டு கம்பியை பிடித்தபடியே தொங்கி கொண்டு வருகின்றனர். லாரி, வேன், ஆட்டோ போன்றவற்றை முந்த முடியாமல் செல்ல வேண்டியுள்ளது. அசம்பாவிதம் நடந்தால் நாங்கள் தான் பாதிக்கப்படுகிறோம். வழக்கு, கோர்ட் என அலையவேண்டியுள்ளது. பஸ்களில் கதவு அமைக்கும் பணியை தீவிரப்படுத்தினால் இது போன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Gopala S
ஜூலை 26, 2025 20:37

மாணவர்களுக்கு இலவச இ சைக்கிள் வழங்கினால், எளிதாக பள்ளிக்கு செல்ல முடியும். பேருந்தை குறைந்த தொலைவு பயணங்களுக்கு எதிர் பார்க்க வேண்டியதில்லை. கூட்ட நெரிசல் மற்றும் தொங்கல் பயணம் குறையும்.


Gopala S
ஜூலை 26, 2025 18:48

E cycle at no cost for school students is a solution


R S BALA
ஜூலை 26, 2025 17:11

தானியங்கி கதவு சரியான தீர்வுதான் ஆனால் வயதானவர்கள் மற்றும் பெண்கள் பாதிக்கபடுவார்கள் இவர்கள் மெதுவாக உள்ளே ஏறுவதற்குள் கதவினை மூடி கீழே விழுவார்கள் சென்னை மாநகர பேருந்தில் பலமுறை பார்த்தக்காட்சி..


ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
ஜூலை 26, 2025 13:06

இந்தியாவில் சட்டமும் இல்லை ஒழுங்குமில்லை. இந்த படத்தை காண்பதில் ஓன்றும் வியப்புமில்லை. பாரத் மாதாக்கி ஜெ.


lana
ஜூலை 26, 2025 11:05

கூட்டம் இல்லாத பேருந்தில் இது தான் நடக்கிறது. உள்ளே வந்தால் பேருந்தின் கூரை ஐ தட்டிக் கொண்டு வருகிறது. யாரேனும் கேட்டா மொத்தம் ஆக சேர்ந்து கொண்டு அவர்கள் ஐ கிண்டல் செய்வது. இல்ல என்றால் அடிக்க செல்வது. இதில் தமிழகம் படித்து முன்னேறிய மாநிலம் ன்னு பெருமை வேறு. ஒழுக்கம் என்பது வாய்ப்பு இருந்தும் தவறு செய்யாமல் இருப்பது. கதவு இருக்க வேண்டும் cctv இருக்க வேண்டும் என்பது எல்லாம் வெறும் ஏமாற்று வேலை. நாம் செய்யும் அனைத்து ம் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கிறார் என்ற எண்ணம் சிறு வயதில் இருந்தே இருக்க வேண்டும். இங்கு தான் நீதி நெறி நல்ல ஒழுக்கம் எல்லாம் தேவை இல்லை. காசு சம்பாதிக்க மட்டுமே கல்வி என்றால் எப்படி விளங்கும்


sankaranarayanan
ஜூலை 26, 2025 09:54

படிக்கும் வயசில் படிக்கட்டு பயணம் மாணவர்களுக்கு எதுக்கு அயல்நாடுகளில் மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அரசே முன்னின்று அவர்களின் படிப்பை பாதியிலேயே தடுத்து வீட்டிற்கே அனுப்பிவிடுவார்கள் இந்தியாவில் மட்டுந்தான் இது போன்று அபரிமிதமான சலுகைகள்


Chandru
ஜூலை 26, 2025 09:53

These boys cannot be called as students. They are thugs and budding anti social elements. Their only intention is to get the attraction of girls travelling along


SATHIAVANI MUTHU
ஜூலை 26, 2025 09:44

பள்ளி, கல்லூரி நேரங்களில் பேருந்து அதிகம் விட்டால் இந்த தவறு நடக்காதே இதை நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும். இலவசம் என்ற பெயரில் பாதியளவு பேருந்து குறைக்கபபட்டுவிட்டது புரிந்து கொள்ளுங்கள்


Thirumal Kumaresan
ஜூலை 26, 2025 09:40

மக்களையோ மாணவர்களையே குற்றம் சொல்வது தவறு என்றே நினைக்கிறேன். எங்கு பேருந்துகள் அதிகரிக்க வேண்டுமோ அதை செய்யவேண்டும், எல்லா பேரூந்துக்கும் கதவு பொறுத்த வேண்டும்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 26, 2025 09:36

திருபுவனம்ன்னு சொல்றீங்க, அந்த ஊருல போலீஸ் ஸ்டேஷன் இருக்குமே .நாலு பசங்களை புடிச்சு விசாரிக்கலாம். பெத்தவங்களுக்கும் 25 லட்சம் கிடைக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை