உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று முதல் தபாலில் ஓட்டுனர் உரிமம்

இன்று முதல் தபாலில் ஓட்டுனர் உரிமம்

சென்னை:போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அனைத்து ஓட்டுனர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றுகள், இன்று முதல் விரைவு அஞ்சல் வாயிலாக அனுப்பப்பட வேண்டும். வாகன மற்றும் சாரதி மென்பொருளில் தவறான தொடர்பு எண் மற்றும் முகவரியை குறிப்பிட்டதன் காரணமாக, தபால் திரும்பப் பெறப்பட்டால், உரிய விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்தி திருத்தம் செய்யப்பட்ட பின்னரே, சம்பந்தப்பட்ட ஆவணத்தை விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். மாலை 4:00 மணி வரை 'பிரின்ட்' செய்யப்படும் ஆவணங்களை, அன்றைய தினமே அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி