உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ் ஸ்டேஷன் மாடியிலிருந்து குதித்த போதை நபர் காயம்

போலீஸ் ஸ்டேஷன் மாடியிலிருந்து குதித்த போதை நபர் காயம்

காரியாபட்டி : போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மது போதையில் மாடியிலிருந்து குதித்ததால் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மல்லாங்கிணர் மேட்டுப்பட்டி நேதாஜி நகரை சேர்ந்த காளீஸ்வரன் 28. நேற்று மாலை மதுபோதையில் இருந்தார். தனியார் நிறுவனத்தில் வேலை முடித்து சென்ற பெண்களை கேலி கிண்டல் செய்தார். இது குறித்து மல்லாங்கிணர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் காளீஸ்வரனை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். எஸ். ஐ,, வெளியில் சென்றிருந்ததால் போலீஸ் ஸ்டேஷன் மாடியில் அமர வைத்தனர். போதை அதிகமாகி வார்த்தையில் பேசினார். இதையடுத்து அவரது மனைவிக்கு தகவல் கொடுத்து போலீசார் வரவழைத்தனர். மனைவி போலீஸ் ஸ்டேஷனில் இருந்த நிலையில் திடீரென காளீஸ்வரன் மாடியில் இருந்து குதித்தார். கால் முறிவு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ