உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குடிபோதையில் கார் ஓட்டி விபத்து; வயதான தம்பதி பரிதாப பலி

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து; வயதான தம்பதி பரிதாப பலி

பாலக்காடு : பாலக்காடு அருகே, குடிபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்தியதில், இரு முதியவர்கள் உயிரிழந்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், எலவஞ்சேரியை சேர்ந்தவர் பிரேம்நாத், 45. இவர், நேற்று மதியம் 2:10 மணிக்கு, புது நகரத்தில் இருந்து கொடுவாயூர் நோக்கி காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றார்.கொடுவாயூர் அருகே, சாலையோரம் நின்று கொண்டிருந்த, பாலக்காடு மாவட்டம், நெம்மாரா வண்டாழி தெக்கேகாடு பகுதியைச் சேர்ந்த சாமி, 65, அவரது மனைவி ஜானு, 60, ஆகியோர் மீது, கார் மோதி விட்டு நிற்காமல் சென்றது.இதில், 50 அடிக்கு துாக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த, புதுநகரம் போலீசார், உடல்களை மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அப்பகுதியில் உள்ள, சி.சி.டி.வி., கேமரா பதிவு காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்திய போலீசார், தொடர் விசாரணையில் ஈடுபட்டு, கார் ஓட்டி சென்ற பிரேம்நாத்தை கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'பிரேம்நாத் அளவுக்கு அதிகமாக மது அருந்திய நிலையில், காரை ஓட்டியுள்ளார். அதிவேகமாக கார் ஓட்டியதுடன், விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றுள்ளார். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
நவ 23, 2024 12:32

அந்த குடிகாரப்பாவியை அதே காரை விட்டு ஏற்றவும்.


Admission Incharge Sir
நவ 23, 2024 12:03

நம் தமிழக யூனிபார்ம் கொள்ளையர்கள் கரெக்ட்டாக டாஸ்மாக் கடை வாசலில் இருந்து ஒரு 10அடி தூரத்தில் நின்றுகொண்டு குப்பனையும், சுப்பனையும், சாரி நாம் முன்னேறிவிட்டோம், குமாரையும், சேகரையும் வழிப்பறிசெய்து சின்னவீடு கட்டுவதிலேயே குறியாக இருப்பதால், இது போன்ற சாவுகள் நடைபெறத்தான் செய்யும். என்ன தனியாக செத்ததால் பத்திரிகையில், அதுவும் தினமலர் போன்ற பத்திரிகைத் தொழிலின் தர்மத்தை மனதில்கொண்டுள்ள பத்திரிகை மட்டும், உண்மையை உள்ளபடி சொல்லும். இதுவே கள்ளக்குறிச்சி போன்று கொத்தாக செத்தால் மட்டுமே தமிழ்நாட்டில் சாவுக்கு கூட மரியாதை. ஓகே, ஓகே மணி 12 ஆயிற்று, கடை திறந்தாச்சு, தமிழர்களெல்லாம் கிளம்புங்கப்பா.


M Ramachandran
நவ 23, 2024 10:19

குடி குடியை கெடுக்கும்? யார் குடியை கெடுக்கும்? அப்பாவிகளின் உயிரை கெடுக்கும்


sankaranarayanan
நவ 23, 2024 08:56

இது போன்ற நபர்களை கோர்ட்டு கேசு தாவா துன்று காலம் கடத்தாமல் அரபு நாடுகளில் பின்பற்றுவதுபோல் மக்கள் மத்தியில் நடுரோட்டில் வெட்டி சாய்க்க வேண்டும் அப்போதுதான் இவர்களுக்கு சொரனை வரும் சொந்த புத்தி வரும் அளவோடு குடித்து அடுத்தவர்களை வாழ விடுவார்கள் நீதி மாற்றமே செல்லக்கூடாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை