வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Side effects of Tasmac drink.
நல்லா ஒட்டியிருந்தால் பணி நியமனம் செய்யலாம். எப்படியும் சம்பளம் அரசுக்கு தான் செல்லும்
சென்னை: மதுபோதையில் அரசு பஸ்சை கடத்திச் சென்ற நபரை திருவான்மியூர் போலீசார் கைது செய்தனர்.திருவான்மியூர் பஸ் நிலையத்தில், திருவான்மியூரில் இருந்து கோவளம் செல்லும் அரசு பஸ்( தடம் எண்109) நேற்று இரவு நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த பஸ்சை நள்ளிரவில் திருடி சென்றதாக திருவான்மியூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.நீலாங்கரையில் அந்த பஸ்சை பிடித்த போலீசார், அதில் தூங்கிக் கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்த ஆப்ரஹாம்(35) என்பது தெரியவந்தது. பஸ்சில் சில்லரை கொடுக்கல் வாங்கலில் கண்டக்டருடன் அவர் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது, கண்டக்டர் திட்டியதால், ஆத்திரத்தில் மது அருந்திவிட்டு வந்து நள்ளிரவில் 2 மணியவில் அந்த பஸ்சை கடத்தியதுடன், நீலாங்கரை அருகே லாரி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதும் தெரியவந்துள்ளது. அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Side effects of Tasmac drink.
நல்லா ஒட்டியிருந்தால் பணி நியமனம் செய்யலாம். எப்படியும் சம்பளம் அரசுக்கு தான் செல்லும்