உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குடிபோதையில் தகராறு; சி.ஆர்.பி.எப். வீரர்கள் கைது

குடிபோதையில் தகராறு; சி.ஆர்.பி.எப். வீரர்கள் கைது

பெரம்பலுார்: அரியலுார் மாவட்டம், கோடாலி கிராமத்தை சேர்ந்தவர் குமார் மனைவி சுகுமதி, 48. இவர், கடந்த 18ம் தேதி இரவு, கோடாலி பஸ் ஸ்டாப்பில், அவரது சகோதரர் ஹரிவாசனுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது, பஜாஜ் பைக்கில் வந்த மூன்று பேர், ஹரிவாசன் மீது மோதுவது போல வந்தனர். தட்டிக் கேட்டதால், சுகுமதியையும், ஹரிவாசனையும், மூவரும் தகாத வார்த்தைகளால் திட்டினர். அங்கிருந்த கோடாலி கிராமத்தை சேர்ந்த கலைமணி, வெங்கடேசன், ரமேஷ்குமார் ஆகியோர், குடிபோதையில் இருந்தவர்களின் டூ - வீலரை பறித்து வைத்துக் கொண்டனர். ஆத்திரமடைந்த மூன்று பேரும் அங்கு கிடந்த செங்கற்களை எடுத்து, சுகுமதி தரப்பினர் மீது வீசினர். சுகுமதி தரப்பினரும் கற்களை வீசியதில், சுகுமதி, ராஜாத்தி ஆகியோர் படுகாயமடைந்தனர்.டி.பழூர் போலீசார், குடிபோதையில் இருந்த வாலிபர்களை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரித்ததில், ஆயுதகளம் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன், 37, மிசோரம் மாநிலத்தில், சி.ஆர்.பி.எப். வீரராக பணியாற்றுவதும், கார்த்திகேயன், 30, மஹாராஷ்டிரா மாநிலத்தில் சி.ஆர்.பி.எப். வீரராக பணியாற்றுவதும் தெரியவந்தது.அவர்களின் நண்பரான அருள்செல்வன், 37, சென்னையில் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருவது தெரிய வந்தது.ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை