உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோழிக்கோடுக்கு பதில் கோவையில் இறங்கிய துபாய் விமானம்! புரியாமல் தவித்த பயணிகள்

கோழிக்கோடுக்கு பதில் கோவையில் இறங்கிய துபாய் விமானம்! புரியாமல் தவித்த பயணிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை; கோழிக்கோடு செல்லவிருந்த துபாய் விமானம் ஒன்று, கோவையில் தரையிறங்கியதால் திடீர் பரபரப்பு நிலவியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m285k883&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி ப்ளை துபாய் நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 164 பயணிகள் இருந்தனர். கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்க விமானம் தயாரானது. அப்போது வானிலை மிகவும் மோசமாக இருந்தது. அதன் காரணமாக அரைமணி நேரமாக அந்த விமானம் வானிலேயே வட்டம் அடித்தது.வானிலை சீராகாமல் இருந்ததால் பாதுகாப்பு கருதி விமானம், கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. இதையடுத்து, இன்று காலை 7.45 மணியளவில் விமானம் தரையிறங்கியது. திடீரென கோவை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதால் பயணிகள் சிறிதுநேரம் புரியாமல் குழம்பி போயினர். பின்னர் நிலைமை அறிந்து சமாதானம் ஆகினர்.விமான நிலையத்தில் பயணிகளுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படும் என்று விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வானிலை சீரான பின்னர், மீண்டும் விமானம் கோழிக்கோடு விமான நிலையம் புறப்பட்டு செல்லும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர். மோசமான வானிலையால் கோழிக்கோடு செல்லவேண்டிய விமானம், கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியதால் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. நேற்று திருச்சியில் இருந்து சார்ஜா சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருச்சி விமான நிலையத்தில் 2 மணி நேரம் வானில் வட்டமடித்து பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. அந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் அதை ஒத்த சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

வைகுண்டேஸ்வரன்
அக் 12, 2024 19:24

விமானம் வட்டமடிக்கும் போதே, பைலட் பயணிகளிடம் அறிவிப்பு செய்தார். யாரும் புரியாமல் தவிக்கவில்லை. இறங்கிய பின் கோழிக்கோடு செல்ல எந்த வழி யைத் தேர்ந்தெடுப்பது என்று தான் கொஞ்சம் பேர் கன்பியூஸ் ஆனார்கள்.


hari
அக் 12, 2024 16:32

why not regularise this trip coimbatore needs direct connectivity to dubai badly


Sundar R
அக் 12, 2024 15:22

இது சில பயணியர்களுக்கு சௌகரியம். கோழிக்கோட்டிற்கு கிழக்கில் உள்ள வயநாடு மாவட்டம், தெற்கில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் இருந்து பலதரப்பட்ட வெளிநாட்டு ஊர்களுக்கு கோவையிலிருந்து நேரடி விமான சேவை கிடைப்பதால் பயணிகள் கோவைக்கு வருவதுண்டு. கோவையிலிருந்து மண்ணார்க்காடு வழியாக கோழிக்கோட்டிற்கு நெடுஞ்சாலை வரவுள்ளது. அது வந்து விட்டால் கோவை சர்வதேச விமான நிலையம் திருச்சூர் & கோழிக்கோடு அருகில் உள்ள மாவட்டங்களில் வசிக்கும் பயணியருக்கு மிகவும் அனுகூலமானதாக இருக்கும். நடந்தது நல்லதே.


Iniyan
அக் 12, 2024 14:24

இது எல்லாம் ஒரு சாதாரண நிகழ்வு. இது எல்லாம் ஒரு செய்தியா??


S. Authilingam
அக் 12, 2024 16:37

இது போன்று, பயணிகள் பெட்டியை விட்டு எஞ்சின் மட்டும் தனியே செல்வது, ஏர் இந்தியா விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு வருவது, கவரப்பேட்டை ரயில் விபத்து போன்று இந்த 5 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் கோளாறுகள் நடப்பது எல்லாம் சகலகலா வல்லவன் மோடிஜியின் ஆட்சியில் சாதாரணமாக நடப்பதுதானே? இதை ஏன் பெரிது படுத்திப் பார்க்கிறார்கள். இவற்றிற்கெல்லாம் அந்தந்த மாநில அரசுகளின் திறமையின்மை அல்லது மோடியின் நல்லாட்சிக்கு கலங்கம் ஏற்படுத்த நிகழ்த்தப்பட்ட சதித்திட்டங்களாக இருக்கலாம் அப்படித்தானே?


SRIDHAAR.R
அக் 12, 2024 13:26

பாண்டியராஜும் சேகரும் துபாய் போய் இறங்குவார்கள் ஏ அதுமாதிரியா


Ramesh Sargam
அக் 12, 2024 13:00

நல்லவேளை அந்த திருச்சி விமானம் போல இந்த விமானத்தில் hydraulics பிரச்சினை இல்ல.


ديفيد رافائيل
அக் 12, 2024 11:53

நான் நேற்று morning சிங்காநல்லூர் nearby ல இருந்து பார்த்தேன் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. எனக்கு அப்ப அந்த சமயத்துல காரணம் தெரியல, இப்ப news பார்த்த பின் தான் reason தெரியுது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை