உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார் துரை வைகோ

ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார் துரை வைகோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ம.தி.மு.க., முதன்மை செயலர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த துரை வைகோ தமது முடிவை வாபஸ் பெற்றார். கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதை தொடர்ந்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2019 லோக்சபா தேர்தலுக்குப் பின், அவரது மகன் துரை வையாபுரி, 'துரை வைகோ' என, பெயரை மாற்றிக் கொண்டு, அரசியல் களத்திற்கு வந்தார்.இந்நிலையில், துவக்க காலம் முதல் கட்சியில் இருந்து வருபவரும், வைகோவுக்கு மிக நெருக்கமானவருமான துணை பொதுச்செயலர் மல்லை சத்யாவுக்கும், துரை வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இது மோதலாக முற்றிய நிலையில், மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நீக்குவதற்கான முயற்சியை துரை வைகோ மேற்கொண்டார்; அதை வைகோ ஏற்கவில்லை.ம.தி.மு.க., ஆரம்பித்தபோது, வைகோவுடன் வந்தவர்கள் இப்போது அவருடன் இல்லை. எஞ்சியிருப்பது சத்யா மட்டுமே என்பதால், அவரையும் இழக்க வைகோ விரும்பவில்லை. 'இப்பிரச்னையில், தந்தை - மகன் இடையே நீண்ட நாட்களாக பனிப்போர் இருந்து வந்தது. இதனால், கோபமடைந்த துரை வைகோ, முதன்மை செயலர் பதவியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.இச்சூழ்நிலையில், ம.தி.மு.க.,வின் நிர்வாகக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய பெரும்பாலான நிர்வாகிகள் துரை வைகோவுக்கு ஆதரவாக பேசினர்.இந்தக் கூட்டத்தில் பேசிய மல்லை சத்யா, துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யத் தயார். கட்சி நிர்வாகிகளிடம் வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியை விட்டு விலக்கி வைத்து விடுங்கள். கடைசி வரை வைகோவின் தொண்டனாக இருக்கிறேன் என அவர் பேசியதாக தகவல் வெளியானது.அறிவுரைபிறகு துரை வைகோ - மல்லை சத்யா இடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. இதனைத் தொடர்ந்து, நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று முதன்மைச் செயலர் பதவியில் இருந்து விலகும் முடிவை திரும்பப் பெறுவதாக துரை வைகோ கூறியுள்ளார். கட்சிக்காக இணைந்து பணியாற்றுவோம் என்று இருவரும் நிர்வாகக் குழு கூட்டத்தில் அறிவித்தனர்.

வைகோ பேட்டி

இக்கூட்டத்திற்கு பிறகு வைகோ கூறியதாவது: இனி இதுபோன்ற சூழலுக்கு இடம் கொடுக்கப் போவதில்லை என மல்லை சத்யா உறுதி அளித்து உள்ளார். துரை வைகோ மனம் திறந்து பேசினார். இருவரும் பிரச்னையை நாகரிகமாக தீர்த்தனர். துரை வைகோ ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார். இருவரும் கைகுலுக்கி ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி கொண்டனர். இணைந்து பணியாற்றுவோம் என உறுதி அளித்துள்ளனர். ம.தி.மு.க.,வின் பொதுக்குழுக் கூட்டம் ஜூன் மாதம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். மல்லை சத்யா கூறியதாவது: துரை வைகோ முதன்மை செயலாளராக தொடர வேண்டும் என வலியுறுத்தினேன். இணைந்த கைகளாக நானும் துரை வைகோவும் இருக்கிறோம். துரை வைகோவிடம் மன்னிப்பு கேட்டேன் என்றார்.துரை வைகோ கூறியதாவது: ஜனநாயக இயக்கத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கும். நடந்தவை நடந்ததாக இருக்கட்டும் இனிமேல் நடப்பது நல்லதாக இருக்கட்டும். மல்லை சத்யாவிற்கு நானும் உறுதுணையாக இருப்பேன் என்று வாக்குறுதி அளித்தேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

adiyamaan
ஏப் 22, 2025 13:12

தாயமொழி தெலுங்கர்கள் திராவிடம் எனும் சொல்லை தமிழனை ஏமாற்ற கருவியாக செயல்படுகிறது


KRISHNAN R
ஏப் 24, 2025 09:01

இதுக்கு இல்ல என்று அவர்களிடம் இருந்து பதில் இல்லை.


திருஞான சம்பந்த மூர்த்தி தாச ஞானஸ்கந்தன்
ஏப் 21, 2025 12:50

ரயில்வே பிளாட்பாரத்தில் சுமை தூக்கும் கூலிகள் கையில் ஒரு சிவப்பு பட்டை லேபிள் அணிந்திருப்பார்கள். அதுதான் அவர்களின் லைசன்ஸ்.


MARUTHU PANDIAR
ஏப் 20, 2025 21:44

அப்பாருக்கு வயசாயி முடியாம இருந்த புள்ள கடையை கவனிச்சுக்கலாம், பேக்டரி, வியாபாரம், இப்படிப்பட்ட மேட்டர்களை கவனிக்கலாம். இது என்னடான்னா......


MARUTHU PANDIAR
ஏப் 20, 2025 21:41

அப்பன் நல்லவனா புள்ள நல்லவனான்னு முடிய பிச்சுக்கிட்டு மக்கள் அலைஞ்சாங்களா? அது தான் தங்கள் திராவிட கலாச்சாரத்தின் படி அடுத்த நாளே செஞ்சுப்புட்டாரு அப்புடீங்கராங்க.


Ramesh Sargam
ஏப் 20, 2025 20:30

ராஜினாமா நாடகம் சிறப்பாக நடந்து முடிந்தது. ஏமாந்தது யார்? மக்களா அல்லது கட்சியின் மற்ற உறுப்பினர்களா?


KRISHNAN R
ஏப் 20, 2025 19:26

இந்தியாவில் நடப்பது ஜனநாயகமா.... குடும்ப ஆட்சியா,,ஜனநாயகமான குடும்பமா,,,,குடும்பமாக..ஜனநாயகமா?.... ஒன்னும் புரியவில்லை


TMM
ஏப் 20, 2025 19:01

அடச்சே……இப்படி புஸ்னு போயிடுச்சே.துரை US போய் செட்டில் ஆகிடுவாரு, வைகோ கட்சிய திமுக ல இணைத்து விட்டு போய் விடுவார் என்று நினைத்தேன்…டைம்தான் வேஸ்டு


மீனவ நண்பன்
ஏப் 20, 2025 22:36

டிரம்பு உள்ளே விட மாட்டார் ..


KRISHNAN R
ஏப் 21, 2025 20:52

அது சரி இங்குள்ள வாரிசுகள் US ல எதுக்கு.. போறாங்க


VIDYASAGAR SHENOY
ஏப் 20, 2025 18:59

நானும் ரவுடி தான் என காட்ட இவ்வளவு அலப்பறை தேவை இல்லை


மீனவ நண்பன்
ஏப் 20, 2025 18:59

மூணு பேர் மட்டுமே இருந்தால் பிரச்னை தீர்ப்பது சுலபம்...கட்சிக்கு தோள் கொடுக்க நாலு பேர் வேணுமே


Anantharaman Srinivasan
ஏப் 20, 2025 18:51

நேத்தே தெரியும் இது ஊரை ஏமாற்றும் தில்லாலங்கடி வேலையென்று. மதிமுக வைகோ குடும்ப கட்சி. வேறு தலைவர் வர முடியாது.


திருஞான சம்பந்த மூர்த்தி தாச ஞானஸ்கந்தன்
ஏப் 22, 2025 05:53

எல்லா வாரிசுகளும் சோபிப்பது இல்லை என்று கண்ணெதிரே காண்கிறோம். சில முன்றாவது தலைமுறை வாரிசுகள் அகில இந்திய அளவில் பேட்டி கொடுத்து பிச்சு உதறுகிறார்கள். PTR, தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி N V N சோமு, கலாநிதி வீராசாமி இன்னும் சிலர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை