உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இ- - சேவை மைய சர்வர் பழுது சான்றிதழ் பெற முடியாமல் தவிப்பு

இ- - சேவை மைய சர்வர் பழுது சான்றிதழ் பெற முடியாமல் தவிப்பு

சிவகங்கை,:இ - சேவை மைய சர்வர் முடக்கத்தால், பல்வேறு சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கவோ, நகல் பெறவோ முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகினர்.தமிழ்நாடு மின் ஆளுகை நிறுவனத்தின் கீழ் 12,649 இ - சேவை மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்கள் வாயிலாக வருமான சான்று, சிறு, குறு விவசாயி சான்று, கலப்பு திருமணம், உட்பட 15 வகையான சான்றுகள் வழங்கப்படுகின்றன.லட்சக்கணக்கான மக்கள் தினமும் சான்றிதழ்கள் கோரி, இ - சேவை மையங்களில் விண்ணப்பிக்கின்றனர். ஆனால், மே 8ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானதற்கு பின், சர்வர் பழுதானதால், ஏராளமான மாணவர்கள், முதல் பட்டதாரி சான்று, ஜாதி, இருப்பிட சான்று பெற முடியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர்.தமிழ்நாடு மின் ஆளுகை நிறுவன அதிகாரிகள் கூறுகையில், 'தலைமை அலுவலகத்திற்கு தெரிவித்துள்ளோம். விரைவில் தீர்வு காணப்பட்டு, சான்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை