உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்பது அத்துமீறல்: சென்னை ஐகோர்ட்

தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்பது அத்துமீறல்: சென்னை ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: குற்றச்செயல்களை கண்டறிவதற்காக தனி நபரின் உரையாடலை ஒட்டுக் கேட்பதை அனுமதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.சி.பி.ஐ., பதிவு செய்த வழக்கு தொடர்பாக கிஷோர் என்பவரது தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்க மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், குற்றங்களை கண்டுபிடிக்க ஒருவரது தொலைபேசி உரையாடலை ரகசியமாக ஒட்டுக் கேட்பதை அனுமதிக்க முடியாது. தனி நபரின் உரையாடல்களை ஒட்டு கேட்பது அந்தரங்க உரிமைக்கு எதிரானது. பொது நலன் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டுமே ஒட்டு கேட்க முடியும். தனிநபரின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்பது அத்துமீறல்' எனக்கூறி அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

V.Mohan
ஜூலை 02, 2025 20:54

ஐயா நீதிபதிகளே...அயோக்கியத்தனம் நிறைந்து காசையும் உயிரோடு சேர்த்து பறித்து நாசம் பண்ணும் ரம்மி விளையாட்டு அத்துமீறல் இல்லை, நாட்டு நலனுக்காக ஒட்டு கேட்பது தவறு. நல்லா இருக்கு நாயம்


Sudha
ஜூலை 02, 2025 19:07

நீதி மன்றங்கள் சட்ட விதிகளை எடுத்து சொல்ல வேண்டுமா அல்லது தங்களுக்கு அவ்வப்போது தோன்றும் உணர்வுகளை கூறலாமா? இது தனி நபர் சுதந்திரம் எனும் போது அந்த உத்தரவை பிறப்பித்த அறிவிலியை தண்டிக்க கண்டிக்க வேண்டாமா?


GMM
ஜூலை 02, 2025 18:51

குற்றத்திற்கு கோர்ட்டில் ஆதாரம் தேவை. தொலை பேசி உரையாடல் ஒரு ஆதாரம், விசாரணைக்கு வழிகாட்டி. சிபிஐ யின் தகவலை ஆட்சேபணை இல்லாமல் நீதிமன்றம் ஏற்றால், ஒட்டு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. கூழுக்கும் ஆசை. மீசைக்கும் ஆசை. நீதிமன்றத்தை கவனிக்க தணிக்கை செய்ய யாரும் நாட்டில் இல்லை?


venugopal s
ஜூலை 02, 2025 18:21

மத்திய பாஜக அரசு என்ன தவறு செய்தாலும் அது குற்றம் இல்லை. அதே தவறை எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசு செய்தால் மட்டுமே குற்றம்!


அப்பாவி
ஜூலை 02, 2025 18:17

பிகாசஸ் மூலம் ஒட்டு கேக்கலாம் கை. நாட்டின் பாதுகாப்புக்குன்னு சொல்லிடலாம் ஹை.


என்றும் இந்தியன்
ஜூலை 02, 2025 17:38

பைத்தியமே கொஞ்சம் நில்லு வைத்தியரிடம் போய் சொல்லு, முட்டாளின் மூலையில் முந்நூறு பூ மலரும் என்ற பாடல்கள் நினைவுக்கு வருகின்றது உச்ச உயர் நீதிமன்றங்களின் ஒவ்வொரு செய்கைகளும்???நீதிமன்றம் என்றால் மனிதம் அறிந்த நீதிபதிகள் வக்கீல்கள் என்று பார்த்தால் வெறும் பணம் ஒன்றே பார்க்கும் நீதிபதிகள் வக்கீல்கள் நிறைந்த இடம் ஒரு சாக்கடை போல ஆகிவிட்டது தெரிகின்றது


shakti
ஜூலை 02, 2025 17:30

இந்த துரைமார்களுக்கு கேள்வி எழுவது இயல்பே


Ganapathy
ஜூலை 02, 2025 17:09

முன்பு இந்திரா தேசத்தை ஆண்டபோது அடுத்தவர் எழுதிய கடிதங்களை குற்றவாளியைப் பிடிக்க தபால்துறை எப்ப வேண்டுமானாலும் பிரித்து படிக்கலாம்னு ஒரு உத்திரவு இருந்தது பற்றி இந்த தலைமுறைக்கும் தெரியாது. இந்த கோர்ட்க்கும் தெரியாது.


Kannan Chandran
ஜூலை 02, 2025 17:04

முதலில் இதுமாதிரி தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்..


ஆரூர் ரங்
ஜூலை 02, 2025 16:48

தனிநபர் அந்தரங்கத்தை விட தேசநலன் முக்கியம். சட்டத்தின் ஆட்சியை விடவு‌ம் அது முக்கியம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை