உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொருளாதார குற்றப்பிரிவு இணையதளம் புதுப்பொலிவு

பொருளாதார குற்றப்பிரிவு இணையதளம் புதுப்பொலிவு

சென்னை : பொருளாதார குற்றப்பிரிவு இணையதளம், நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.தமிழக காவல் துறையில், நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்க, பொருளாதார குற்றப்பிரிவு துவக்கப்பட்டது. இதனுடன் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு இணைக்கப்பட்டு, தற்போது ஒரே பிரிவாக செயல்படுகிறது. இப்பிரிவுக்கான இணையதளம் தற்போது புதுப்பிக்கப்பட்டு உள்ளது.இதில், பொருளாதார குற்றப்பிரிவு செயல்படும் விதம், பணிபுரியும் அதிகாரிகள் பெயர், அவர்களின் தொடர்பு எண்கள், மோசடி நிதி நிறுவனங்கள் தொடர்பான எச்சரிக்கை தகவல்கள் போன்றவை இடம் பெற்று உள்ளன. இணையதள முகவரி, tneow.gov.in. இதன் வழியே புகார் அளிக்கவும், அதன் தற்போதைய நிலை குறித்து அறிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
டிச 10, 2024 07:22

பொருளாதார குற்றப் பிரிவும் குற்றவாளிகளை காப்பாற்றி ஆதாயம் அடைவதிலேயே குறியா செயல்படுகிறது.உதாரணமாக 2006 விவசாய கடன் தள்ளுபடியில் அடித்த கொள்ளை குறித்து புகார் செய்ததில் புகார் கூட்டு கவலைக்கு உடந்தையாக இருந்த கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்/துணை பதிவாளர் செய்ய வேண்டும் என குற்றவாளிகளிடம் பங்கு பெற்றுக்கொண்டு காப்பாற்றி விட்டனர்.


சமீபத்திய செய்தி