உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டில் ஈ.டி., சோதனை

ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டில் ஈ.டி., சோதனை

செங்கல்பட்டு:சிங்கபெருமாள் கோவில் அருகே, ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் அடுத்த செங்குன்றம், அலமேலுமங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன், 59. தொழிற்சாலைகள் அமைக்க, பெரிய நிறுவனங்களுக்கு நிலம் வாங்கி கொடுக்கும் பணியை செய்து வந்தார். நேற்று காலை, அவரது வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.எட்டு மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடந்தது. வரதராஜன் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் நெருக்கமாக இருந்தார். சோதனை குறித்த விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை.சமீபத்தில், அமைச்சர் நேரு உறவினர் வீடு மற்றும் நிறுவனங்களில், அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல், சென்னை ஷெனாய் நகரில், கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்திலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ