உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீரழியும் கல்வித்துறை: நயினார் நாகேந்திரன்

சீரழியும் கல்வித்துறை: நயினார் நாகேந்திரன்

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று ஓராண்டாகியும், பணி நியமன ஆணை வழங்காமல் ஆசிரியர்களை, தி.மு.க., அரசு வதைத்து வருவது கண்டனத்திற்கு உரியது. கடந்த 2023ல், 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 2024 பிப்ரவரியில் தேர்வு நடத்தி, மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து, ஓராண்டாகிறது.இருப்பினும், பணி நியமன ஆணை வழங்க இயலாத அளவிற்கு, தி.மு.க., அரசின் நிர்வாகம் செயலற்று இருக்கிறதா? ஒருபுறம் ஆசிரியர்கள் இன்றி, பல அரசு பள்ளிகள் அல்லல்படும் வேளையில், மறுபுறம், கலை கல்லுாரிகள், சட்ட கல்லுாரிகள், பல்கலைகள் என, அரசு கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் பேராசிரியர்கள் பற்றாக்குறையால் உயர் கல்வி துறை முடங்கியுள்ளது.ஆசிரிய பணியிடங்களை நிரப்ப வேண்டிய தி.மு.க., அரசோ, இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்காமல் இழுத்தடிப்பது, பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யாதது, உதவி பேராசிரியர் தேர்வை நடத்தாது என, தன் திறனற்ற செயல்பாட்டால், கல்வி துறையை மேலும் சீரழித்து வருகிறது.தமிழக கல்வி துறையின் மீதும், மக்களின் எதிர்காலம் குறித்தும் சிறிதேனும் அக்கறை இருந்தால், இதற்கு மேலும் காலம் தாழ்த்தாமல், தேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு உடனே பணி நியமன ஆணை வழங்க வேண்டும். கல்லுாரிகளில் போதிய பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

pmsamy
ஜூலை 06, 2025 09:46

நாகேந்திரன் எதுக்காக உத்தர் காண்ட் சத்தீஸ்கர் கல்வி பத்தி பேசுறார்


veeramani
ஜூலை 06, 2025 09:35

உயர் அளவு இனிமேலாவது மத்திய அரசின் தலைமையில் செயல்படவேண்டும். சட்டமன்ற தொகுதி ஒன்றுக்கு ஒரு அரசு கலை கல்லூரி ஆரம்பித்துவிட்டு பேராசியர்களும், லெக்ட்டர்களும் இல்லை என்றால் ....மாணவர்கள் எப்படி படிப்பர்?? கோவி செழியன் என்ன சே ய்கிறார்


Kasimani Baskaran
ஜூலை 06, 2025 09:20

தமிழன் படித்தால் என்று தீம்க்காவுக்கு ஓட்டுப்போடுவான்? ஆகவே கல்வியை நாசமாக்கவேண்டும் - அதே சமயம் ஆசிரியர்களும் தீம்க்காவுக்கு ஓட்டும் போடவேண்டும். ஒரே வழி அளவில்லாத பொய்கள்தான்.


V RAMASWAMY
ஜூலை 06, 2025 08:23

மாணவர்களுக்கு நன்னெறி நற்பழக்கவழக்கங்கள் நல்லறிவு இவையெல்லாம் சொல்லிக்கொடுக்கும் கல்வி கொடுக்காமல் அரசியல் கலந்த தீய பொய் புகட்டும் கல்வியறிவு மாணவர்களின் எதிர்காலத்திற்கோ, அவர்கள் வீட்டிற்கோ, மாநிலத்திற்கோ தேசத்திற்கோ நல்லதல்ல, தீய விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். பல அறக்கட்டளைகள், உதாரணத்திற்கு டான் போஸ்கொ, சின்மயானந்தா, சத்ய சாய் பல்கலைக்கழகம், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பள்ளிகள், கல்லூரிகள் இவற்றில் படித்த மாணவர்கள் மிகச்சிறந்து விளங்குகிறார்கள்.


vivek
ஜூலை 06, 2025 08:13

எங்கப்பா


தேவதாஸ் புனே
ஜூலை 06, 2025 07:46

தேர்வுகள் முடிந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் மதிப்பெண் சான்றிதழ் வழங்காத பல்கலைக்கழகங்கள்...... இதை விட கேவலம் என்ன இருக்கிறது....?


Svs Yaadum oore
ஜூலை 06, 2025 07:17

பெண் பிள்ளைகளை பள்ளி கூடம் அனுப்ப மாணவிகளின் பாதுகாப்புக்கு உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை ... இப்படி ஒரு கோரிக்கை எழுப்பினால் மானமுள்ள எந்த ஒரு அரசும் நாண்டுகிடும்.. விடியல் திராவிடனுங்களுக்கு மானம் வெட்கம் என்று என்னிக்குமே இருந்தது கிடையாது. ஒரு ஆசிரியர் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லையாம். இந்த பள்ளி ஆசிரியர் முழுக்க லஞ்சத்தில் நியமனம். பள்ளியில் சொல்லி கொடுப்பது ராமசாமி திராவிட கல்வி. பள்ளி பாடத்தில் ஆத்திச்சூடி கொன்றைவேந்தன் சமூகநீதி மத சார்பின்மையாக நீக்கி விட்டார்கள். இந்த திராவிட ராமசாமி ஆசிரியனுங்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் வேண்டுமாம் ...


Svs Yaadum oore
ஜூலை 06, 2025 07:13

விடியல் திராவிடனுங்க ஆட்சியில் பள்ளி மாணவிகளை சினிமா பாட்டுக்கு குத்தாட்டம் ஆட விட்டு அதை பதிவு செய்து வெளியிடுகிறது பள்ளி கல்வித்துறை ..பள்ளி கலைவிழாவாம் .. பள்ளி கல்வி முழுக்க சீரழிந்தது ..பள்ளி கல்வி துறை மதம் மாற்றும் கும்பல் பிடியில் ..அரசு பள்ளி ஆசிரியர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்படுவது தொடர்கதை .....விடியல் ஆட்சியில் மிக கேவலமான துறை பள்ளி கல்வி துறை ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை