உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் கம்பியை மிதித்த மூதாட்டி பலி

மின் கம்பியை மிதித்த மூதாட்டி பலி

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகே வாழை தோட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த மூதாட்டி இறந்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த மாயம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமானுஜம் மனைவி செல்லம்மாள், 65; கணவரை இழந்தவர். மகன் பாலுவுடன் வசித்து வந்தார்.நேற்று முன்தினம் அதிகாலை 4:00 மணியளவில் செல்லம்மாள் அவரது வயலில் இருந்த மண்வெட்டியை எடுக்கச் சென்றபோது, அருகாமையில் உள்ள வாழை தோட்டத்தில் அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கியதில் செல்லம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார்.புகாரின்பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ