உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன்னாள் அமைச்சர் வீரமணி மீது விசாரணைக்கு பிறகே வழக்கு தாக்கல் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் விளக்கம்

முன்னாள் அமைச்சர் வீரமணி மீது விசாரணைக்கு பிறகே வழக்கு தாக்கல் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் விளக்கம்

சென்னை:திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில், 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிட்டார். அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், சொத்து விபரங்களை குறைத்து, தவறான தகவல்களை தெரிவித்ததாக, வேலுாரை சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி, தேர்தல் கமிஷனில் புகார் அளித்தார்.அதன்படி, திருப்பத்துார் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், கே.சி.வீரமணிக்கு எதிராக, தேர்தல் கமிஷன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வீரமணி மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கில், ஜோலார்பேட்டை தொகுதி தேர்தல் அதிகாரி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விபரம்:வீரமணி தனது வேட்பு மனுவில் கூறியிருந்த அசையும் சொத்துக்களின் மதிப்பிற்கும், வருமான வரி கணக்கில் கூறப்பட்ட மதிப்பிற்கும், 14.30 கோடி ரூபாய் அளவுக்கு வித்தியாசம் இருப்பது கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில், விசாரணைக்கு பிறகே வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. எனவே, வழக்கை ரத்து செய்ய கோரி, வீரமணி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. வரும் 18ம் தேதிக்கு வழக்கு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ