உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சியில் தேர்தல் கமிஷன் ஆலோசனை

திருச்சியில் தேர்தல் கமிஷன் ஆலோசனை

திருச்சி : திருச்சியில் தமிழக தேர்தல் கமிஷ்னர் சோ.அய்யர் தலைமையில் இன்று தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாகர்கோவில் உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்கள், எஸ்.பி., ஐ.ஜி., டி.ஐ.ஜி., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அய்யர் கூறியதாவது : 2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல், இனி வரும் தேர்தல்களுக்கு முன் உதாரணமாக விளங்க வேண்டும்; பூத் ஸ்லிப் வழங்கும் பணிகள் அரசு ஊழியர்களால் இன்று முதல் நடைபெற்று வருகிறது; பூத் ஸ்லிப் இல்லாதவர்கள் பூத்திற்கு அருகிலேயே ஸ்லிப்பை பெற்று கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது; பூத் ஸ்லிப்போடு 16 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை எடுத்து வர வேண்டும்; திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் பிரசாரம் செய்யலாம்; ஆனால் வேட்பாளர்கள் பேரணியாகவோ, கூட்டமாகவோ சென்று பிரசாரம் செய்யக் கூடாது; வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று மட்டுமே பிரசாரம் செய்ய வேண்டும்; இது தொடர்பான அறிக்கை கலெக்டரால் வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை