உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருத்துக்கணிப்புகளை தவிடு பொடியாக்கிய தேர்தல் முடிவுகள்

கருத்துக்கணிப்புகளை தவிடு பொடியாக்கிய தேர்தல் முடிவுகள்

சென்னை: ஜூன் 1ம் தேதி வெளியாகிய அனைத்து கருத்துக் கணிப்புகளை, இன்றைய தேர்தல் முடிவுகள் தவிடு பொடியாக்கி உள்ளது.தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் பா.ஜ., அமோக வெற்றி பெறும் என கூறப்பட்டது. ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட தேர்தல் முடிந்த பிறகு அனைத்து கருத்துக்கணிப்புகளும் பா.ஜ.,வுக்கு சாதகமாகவே அமைந்தது. பா.ஜ., தனி மெஜாரிட்டி உடன் ஆட்சி அமைக்கும், பா.ஜ., கூட்டணிக்கு 370க்கும் மேல் கிடைக்கும் என அனைத்து ஊடகங்களும் தெரிவித்தன. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ‛ இண்டியா ' கூட்டணி ஆட்சி அமைக்கும் எனக்கூறியிருந்தது.இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்த நிலையில், கருத்துக்கணிப்புகள் முடிவு அனைத்தும் தவிடு பொடியாகியது. துவக்கத்தில் பா.ஜ., முன்னிலை பெற்றாலும் நேரம் செல்ல செல்ல, பா.ஜ., பின்னடைவைச் சந்தித்தது. அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சியின் ஆதரவுடனேயே ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மத்தியில் பாஜ., மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ள போதிலும், தனி மெஜாரிட்டி கிடைக்காதது அக்கட்சி தொண்டர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

anbu
ஜூன் 05, 2024 02:08

INDI ALLIANCE EVM ok yaa ?now


என்றும் இந்தியன்
ஜூன் 04, 2024 16:53

நெனச்சது ஓண்ணு சொன்னது ஓண்ணு நடந்தது இன்னொண்ணு


GMM
ஜூன் 04, 2024 13:44

கருத்து கணிப்பு சில தரவுகள் அடிப்படையில். கொஞ்சம் மாற்றம் இருக்கும். இவ்வளவு மாற்றம் ஏன் என்று புரியவில்லை. ஒரு சார்பாக நடந்தால் வாடிக்கையாளர் இழக்க நேரிடும். அப்படி பத்திரிகை நடந்து கொள்ளாது. கருத்துக்கு பின் எதிர் கட்சி உஷார் ஆகி, அதிர்ந்து திடீர் அறிக்கை விட்டன. புள்ளி ஆதாரம் இல்லாமல் உறுதியாக கூறினார். இது எப்படி? ஆதார் போன்று ஒரு அமைப்பு தகவல் சேகரித்து, நாடு முழுவதும் பராமரிக்க வேண்டும். வாக்காளர்கள் நிரந்தர அடையாள எண் வழங்கிய பின் தேர்தல் அறிவிப்புக்கு முன் முகவரி அடிப்படையில் வாக்களிக்கும் தொகுதி ஒதுக்கீடு. பிஜேபி உள் கட்சி விவகாரம் சில வட மாநிலங்களில் இருக்கும் போல் தெரிகிறது. வலுவான மத்திய அரசு இல்லாமல், நாட்டின் அபிவிருத்தி தவிடு பொடி ஆகும். முதல் வேலையாக நீதிமன்ற தேர்வு, அதிகாரம் முறைப்படுத்த வேண்டும்.


Apposthalan samlin
ஜூன் 04, 2024 13:23

அயோ பாவம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை