உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆர்.டி.ஜி.எஸ்., முறையில் மின் கட்டணம் செலுத்த வசதி

ஆர்.டி.ஜி.எஸ்., முறையில் மின் கட்டணம் செலுத்த வசதி

சென்னை:மின் நுகர்வோர், ரொக்க பணமாகவும், டிஜிட்டல் முறையிலும், மின் வாரியத்திற்கு மின் கட்டணம் செலுத்தலாம்.வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவினர் டிஜிட்டல் முறையில், இணையதள வங்கி வாயிலாக, 'டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, மொபைல் பேங்கிங்' மற்றும் யு.பி.ஐ., போன்ற சேவைகளின் கீழ், கட்டணம் செலுத்துகின்றனர்.பெரிய தொழிற்சாலைகளை உள்ளடக்கிய உயரழுத்த பிரிவினர், என்.இ.எப்.டி., - ஆர்.டி.ஜி.எஸ்., வாயிலாக, மேற்கண்ட டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்துகின்றனர். தற்போது, தாழ்வழுத்த பிரிவு நுகர்வோர், அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவையும், என்.இ.எப்.டி., - ஆர்.டி.ஜி.எஸ்., முறையில் கட்டணம் செலுத்தும் வசதியை, மின் வாரியம் துவக்கியுள்ளது.மொத்தம் உள்ள, 3.31 கோடி நுகர்வோரில், 57 சதவீதம் பேர் டிஜிட்டல் முறையில் செலுத்துகின்றனர்.அவர்கள் செலுத்தும் தொகை, மொத்த மின் கட்டண வசூலில் 75சதவீதமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்