உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாசவேலை செய்த துாதரக அதிகாரி ஆஜராக மறுப்பு

நாசவேலை செய்த துாதரக அதிகாரி ஆஜராக மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : நம் நாட்டில் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டிய வழக்கில், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட, பாகிஸ்தானைச் சேர்ந்த, இலங்கை துாதரக அதிகாரி, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.பாகிஸ்தானைச் சேர்ந்தவர் அமீர் சுபைர் சித்திக், 51. இவர், இலங்கையில் செயல்படும் பாகிஸ்தான் துாதரகத்தில் விசா பிரிவு அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர், 2012 மற்றும் 2014ம் ஆண்டுகளில், நம் நாட்டில் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டி, தமிழகத்தில் பாக்., உளவாளிகளை நியமித்து வேவு பார்த்தார். இது தொடர்பாக, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக, சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றம், அமீர் சுபைர் சித்திக்கை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து உள்ளது. மேலும், செப்., 15ம் தேதி காலை, 10:30 மணிக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டு இருந்தது; ஆனால், அமீர் சுபைர் சித்திக் ஆஜராகவில்லை. பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kasimani Baskaran
செப் 16, 2025 04:07

உள்ளே சென்று தூக்கவேண்டியது முக்கியம். அத்தோடு இந்தியாவில் வாழ்ந்து கொண்டு அந்நியர்களுக்கு முந்தானைவிரிக்கும் பேடிகளையும் சேர்த்து தூக்கவேண்டும்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 16, 2025 00:23

2011 இல் இருந்து 2021 வரை ஆடீம்கா ஆட்சி நடந்து கொண்டிருந்தது என்பதை கொஞ்சம் தெளிவாக போட்டிருக்கலாம். சங்கிகள் தரவுகள் இல்லாமல் சத்தம் போடுவார்கள்


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 16, 2025 10:38

மனதில் உள்ளூர் பயம் எக்கச்சக்கமாக உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது


Tamilan
செப் 15, 2025 23:22

மோடி அரசு உளவு பார்த்ததாக கனடா கத்தார் மேலும் பல நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன .


நிக்கோல்தாம்சன்
செப் 16, 2025 06:27

உங்க சொந்தக்காரனை இங்கே கொண்டுவந்து ஒப்படைத்து விட்டு வேறு செய்திகளை பேசுங்க, உங்க அப்பா யாரு என்று கேட்டால் அதற்க்கு பதில் சொல்லாமல் ஸ்டாலின் தான் சொல்ல வர்றாரு என்று பாடினால் செய்தியின் தாக்கம் எப்படி இருக்கும் என்று யோசியுங்க


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 16, 2025 10:39

உங்க சித்தப்பா எங்கேன்னு சொல்லுங்க


Palaniraj Seeniappan
செப் 15, 2025 22:59

for state, DMK and for center BJP are good for government, rest only be opposition party, there should be good opposition party in center but we dont have


Kalaiselvan Periasamy
செப் 15, 2025 22:41

காங்கிரஸ் இனி இந்தியாவிற்கு தேவையற்ற அரசியல் கட்சி .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை