மேலும் செய்திகள்
உ.பி.,யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்
3 hour(s) ago
வள்ளல் தகடூர் அதியமான் பெயரை எழுதிய நெடுஞ்சாலைத்துறை
4 hour(s) ago | 1
சென்னை:ரேஷன் கடைக்கு எடை குறைவாக பொருட்கள் அனுப்பும் பிரச்னைக்கு, அதிகாரிகள் தீர்வு காணாத நிலையில், சமூக வலைதளங்களில், ஊழியர்கள் புகாரை பதிவிட்டு வருகின்றனர்.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து, ரேஷன் பொருட்கள், கடைகளுக்கு எடை குறைவாக அனுப்பப்படுவதாக புகார்கள் எழுகின்றன. இந்த பிரச்னைக்கு, அதிகாரிகள் தீர்வு காணாமல் இருப்பதால், அதிருப்தி அடைந்துள்ள ஊழியர்கள், சமூக வலைதளங்களில் புகாரை பதிவிட்டு வருகின்றனர்.இதுகுறித்து, ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது:அரிசி, 50 கிலோ மூட்டையில் அனுப்பப்படுகிறது; ஒரு கடைக்கு மாதம், 400 - 500 மூட்டைகளில் அரிசி வருகிறது. பாதிக்கும் மேற்பட்ட மூட்டைகளில் ஒரு மூட்டைக்கு, 5 கிலோ வரை எடை குறைவாக உள்ளது. பருப்பு, கோதுமை மூட்டைகளும் எடை குறைவாகவே அனுப்பப்படுகின்றன. எடை குறைவாக வரும் பொருட்களை ஈடுசெய்யவே, சிலர் தவறு செய்யும் நிலை ஏற்படுகிறது. அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, எடை குறைவாக அனுப்பப்படும் மூட்டைகளை புகைப்படம் எடுத்து, சமூக வலைதளங்களில் புகார் பதிவிட்டு வருகிறோம். இதை பார்த்தாவது, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
3 hour(s) ago
4 hour(s) ago | 1