உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓய்வு நாளில் ஊழியர்கள் சஸ்பெண்ட் கூடாது: முன்கூட்டியே விசாரணையை முடிக்க உத்தரவு

ஓய்வு நாளில் ஊழியர்கள் சஸ்பெண்ட் கூடாது: முன்கூட்டியே விசாரணையை முடிக்க உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவதை தவிர்க்க, அரசு ஊழியர்கள் செய்த முறைகேடுகள் குறித்து முன்கூட்டியே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மனிதவள மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, அனைத்து துறை அரசு செயலர்கள், து றை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்களுக்கு, மனிதவள மேலாண்மை துறை செயலர் சமயமூர்த்தி அனுப்பியுள்ள கடிதம்:'பல்வேறு அரசு துறைகளில், 25 முதல் 30 ஆண்டுகள் வரை பணியாற்றிய அரசு ஊழியர்கள், அமைதியாக ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும்.'ஓய்வு பெறும் நாளில், அவர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்படுவதை தவிர்க்க வேண்டும ் ' என, 2021 செப்டம்பரில், முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.இதை பின்பற்ற, அரசு விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, அரசு ஊழியர்கள் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தால், அவர்கள் ஓய்வு பெறுவதற்கு முன், சம்பந்தப்பட்ட அதிகாரி, ஒழுங்கு நடவடிக்கைகளை விரைவாக முடிக்க வேண்டும். அந்த ஊழியர் ஓய்வு பெறுவதற்கு முன், இறுதி உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.இதன் வாயிலாக குற்றம்சாட்டப்பட்டோர், பெரிய தண்டனை விதிக்கப்படுவதில் இருந்து தப்ப முடியாது. ஒழுங்கு நடவடிக்கைகளை செயல்படுத்த, மனிதவள மேலாண்மை துறை ஏற்கனவே வழங்கியுள்ள காலக்கெடுவை பின்பற்ற வேண்டும்.ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநகரத்தின் விசாரணையை முடித்து, கண்காணிப்பு ஆணையம் வாயிலாக, ஓராண்டுக்குள் அறிக்கை அனுப்ப வேண்டும். தீர்ப்பாயத்தின் விசாரணையை முடித்து, அதன் முடிவுகளை ஓராண்டுக்குள், சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்ப வேண்டும்.தீர்ப்பாயத்தின் அறிக்கை பெற்றதும், துறை தலைவர்களால் நான்கு மாதங்களில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். குடிமைப்பணி விதிகளின் கீழ், 15 நாட்களுக்குள் விளக்கம் கேட்க வேண்டும்.தவறு செய்த அதிகாரி, தன் எழுத்துப்பூர்வ விளக்கத்தை, 30 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும். விளக்கம் பெற்ற ஏழு நாட்களில், விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர், 30 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.விசாரணை அதிகாரியின் அறிக்கை கிடைத்த பின், ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி, அதன் மீது 10 நாட்களில் முடிவெடுக்க வேண்டும்.துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளின் இறுதி உத்தரவுகளை ஏழு நாட்களில் வழங்க வேண்டும்.பணி ஓய்வு பெறுவதற்கு முன் , ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் மீது, நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகளில், நியமன அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி, இறுதி உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Nagarajan D
அக் 24, 2025 16:01

எவனாவது ஒரு நாலணா வக்கீல் கிட்ட ஒருத்தன் போனானானா அவன் அந்த பஞ்சாயத்தை நீதிமன்றங்களிடம் கொண்டுபோய் சேர்ப்பான்... உடனே நீங்களும் துரிதமா 75 வருஷம் இழுத்து குற்றம் சாட்டப்பட்டவனும் செத்துடுவான் வக்கீலும் செத்துடுவான் நீதிபதிகளும் செத்துடுவானுங்க வழக்கு மட்டும் நடந்துக்கிட்டே இருக்கும்... தற்போதைய நிலைக்கும் நீதிமன்றங்கள் சொல்லும் நிலைக்கும் ஒரு வித்யாசமுமில்லை...


baala
அக் 24, 2025 11:13

தீர்ப்பு சரிதான். ஆனால், அவர்களின் குற்றங்களை, விதி மீறல்களை ஏன் அதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறதா அரசு. ஏன் அந்த நாளில் சஸ்பெண்ட்.


KOVAIKARAN
அக் 24, 2025 08:02

பணி ஓய்வு பெறுவதற்கு முன், ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் மீது, நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகளில், நியமன அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி, இறுதி உத்தரவுகள் பிறப்பிக்கப்படாவிட்டால், அந்த ஊழியர்கள் மீதுள்ள ஊழல் வழக்குகள் ஒய்வு பெற்றவுடன் நீர்த்துப்போகவேண்டுமென்றும், அதுபோன்ற செயல்களுக்கு காரணமான அந்த சிறப்பு அதிகாரிகள் மீது வழக்குப் பதியவேண்டுமென்றும் சட்டதை திருத்தினால் தான் இந்த லஞ்ச லாவண்யங்கள் ஒழியும். ஏனென்றால், லஞ்சம் வாங்கிய /ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நியமன சிறப்பு அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்து லஞ்ச வழக்குகளை கிடப்பில் போட்டுவிட்டு, கடைசி நாளில், ஊழியர்களை நிம்மதியாக ஓய்வில் செல்ல அனுமதிக்காமல், கடைசி நாளன்று சஸ்பென்ஷன் செய்கிறார்கள். இது தவரிக்கப்பட வேண்டும்.


Kasimani Baskaran
அக் 24, 2025 03:47

ஒருவர் முறைகேட்டில் ஈடுபட்டு இருந்தாலும் தண்டிக்கக்கூடாது. இபிகோ வுக்கே செக்.... வெளங்கும்


தாமரை மலர்கிறது
அக் 24, 2025 01:59

ரெண்டு மாதத்தில் விசாரித்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். சஸ்பெண்ட் பண்ண கூடாது. என்பது சதவீத அரசு ஊழியர்கள் ஊழல் வாதிகள் தான். இவர்களை அடிக்கடி டிஸ்மிஸ் செய்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும். தான் தவறாக எழுதியதை மாற்ற ரெண்டு லட்சம் லஞ்சம் என்பது புது திராவிட திருட்டு மாடல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை