உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலி மது பாட்டில் திரும்பப்பெறும் திட்டம் ஏப்ரலில் அமல்; ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

காலி மது பாட்டில் திரும்பப்பெறும் திட்டம் ஏப்ரலில் அமல்; ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறை ஏப்ரல் முதல் அமலுக்கு வரும்' என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.நீதிமன்ற உத்தரவின்படி, காலி மதுபாட்டில்களை கடைகளிலேயே திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த, டாஸ்மாக், 2022ல் முடிவு செய்தது. தற்போது, இத்திட்டம் ஒன்பது மாவட்டங்களில் முழுதுமாகவும், ஏழு மாவட்ட மலை பகுதிகளிலும் செயல்பாட்டில் உள்ளது.இங்குள்ள கடைகளில் மதுபாட்டில் விற்கப்படும் போது, கூடுதலாக, 10 ரூபாய் சேர்த்து வசூலிக்கப்படும். காலி பாட்டிலை கடைகளில் வழங்கியதும், 10 ரூபாய் திரும்ப வழங்கப்படுகிறது. இத்திட்டம், 38 மாவட்டங்களிலும் முழுதுமாக செயல்படுத்தப்பட உள்ளது.இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்கும் காலி மது பாட்டில்கள், ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக சேகரிக்கப்படும். இந்த பணிக்கு, தகுதியான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, மாவட்ட வாரியாக டாஸ்மாக் நிறுவனம், 'டெண்டர்' கோரி இருந்தது. இது தொடர்பான வழக்கு இன்று (பிப்.,05) சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, 'தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறை ஏப்ரல் முதல் அமலுக்கு வரும்' என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

S. Neelakanta Pillai
பிப் 06, 2025 05:49

இந்தத் திட்டத்தின் நோக்கம் நல்லது தான் ஆனால் அதை செயல்படுத்தும் விதம் தவறு. ஒரு பொருளின் அடக்க விலைக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூல் செய்வது என்பது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும். காலி பாட்டில்களை திரும்ப பெற்று அதை சுகாதாரக் கேடு இல்லாமல் சுற்றுப்புற சீரழிவு இல்லாமல் மறு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டியது தயாரிப்பாளரின் கடமை. அந்த சுமையை வாங்குபவர்களுக்கு பொருளின் விலையை விட கூடுதலாக சுமத்தி பத்து ரூபாய் வசூல் செய்வது ஏற்புடையதில்லை. எனவே, கூடுதல் பத்து ரூபாயை வாங்குபவருக்கு தண்டமாக வசூலிப்பதை விடுத்து அவர்களுக்கு இன்சென்டிவ் கொடுப்பதாக பொருளின் அடக்க விலைக்கு வாங்கி பயன்படுத்திய பின்பு அந்த பாட்டிலை திரும்ப கொடுத்தால் அவர்களுக்கு 10 ரூபாய் அடக்க விலையில் இருந்து கழிவு கொடுக்கப்படும் என்று சொன்னால் அது வரவேற்கத்தக்கது இதில் நீதிமன்றமும் தவறு இழைத்திருக்கிறது அரசும் தவறு இழைத்திருக்கிறது.


c.mohanraj raj
பிப் 06, 2025 00:11

இது மிகப்பெரிய ஊழலுக்கு வழிவகுக்கும் பழைய இரும்பு கடைக்காரர்களிடம் ஒரு ரூபாய்க்கு பாட்டிலை வாங்கி பத்து ரூபாய் எடுத்துக் கொள்வார்கள் இதுதான் நடக்கும் குடிகாரர்கள் முக்கால்வாசிப்பே நாம் குடிப்பது யாருக்கும் தெரியக்கூடாது என்று தான் குடிப்பார்கள். அவர்கள் பாட்டலை எடுத்துக் கொண்டு போவார்களா என்ன இது ஒரு மடத்தனமான யோசனை


pmnr pmnr
பிப் 05, 2025 15:18

நோ யூஸ்


Kasimani Baskaran
பிப் 05, 2025 13:51

திராவிடப்புரட்சி... மறு சுழற்சியில் உலக சாதனை. சரி சரி... அப்படியே அந்த சார் யாருன்னு சொல்லிட்டு போ.


நாஞ்சில் நாடோடி
பிப் 05, 2025 13:50

ஸ்டாலின் அரசின் கனவுத் திட்டம்...


Kasimani Baskaran
பிப் 05, 2025 13:49

காலிகள் மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் என்று தவறுதலாக படித்து விட்டேன். விற்ற பாட்டிலை விட பத்து மடங்கு எண்ணிக்கையில் பாட்டில் திரும்ப வந்தால் திட்டம் கைவிடப்படும். ரூ 5க்கு பாட்டில் தர பாட்டில் உற்பத்தியாளர்களே வரிசை கட்டி நிற்பார்கள்.


GMM
பிப் 05, 2025 13:45

இதுவெல்லாம் ஒரு திட்டம். வழக்கு. தமிழக நிர்வாகம் உறுதிமொழி. நேரம் போகவில்லை என்றால்,...நீதிமன்ற தணிக்கை, கட்டுப்பாடு, விதிகள் அவசியம். 24 மணி நேரம் நாட்டை பாதுகாக்க ராணுவம். வீட்டை பாதுகாக்க பெற்றோர். ஊரை பாதுகாக்க ?


guna
பிப் 05, 2025 13:40

மொத்தத்துல திமுக ஒரு கயலாகடை ஆயிடுச்சி.....


garsamy 1964
பிப் 05, 2025 13:34

ஒருபக்கம் மருத்துவ மோசடி மறுபக்கம் கல்வியில் மோசடி மொத்த தமிழனையும் சாராயம் குடிக்க வைத்து கொள்ளும் கருணாநிதி கும்பல் தமிழனைப்பிடித்த துயரம் மேலும் சாபக்கேடு .


Changes
பிப் 05, 2025 13:23

அப்படியே ஆவின் பால் காலி பாக்கெட், காலி வாட்டர் பாட்டில், பழைய இரும்பு, பழைய பேப்பர் எல்லாத்தையும் வாங்கி காயிலான் கடை வெக்கலாம். சாராயம் விக்கிறப்போ, இதுல என்ன கேவலம்?


புதிய வீடியோ