உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சடலத்துடன் போராட்டம் நடத்துவதை தடுக்க சட்டம் இயற்றுங்க: போலீஸ் கமிஷன் பரிந்துரை

சடலத்துடன் போராட்டம் நடத்துவதை தடுக்க சட்டம் இயற்றுங்க: போலீஸ் கமிஷன் பரிந்துரை

சென்னை: சடலத்துடன் போராட்டம் நடத்துவதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என போலீஸ் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.தமிழகத்தில், இறந்தவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள், சடலத்தை சாலையில் கடத்தி போராட்டம் நடத்தும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கிறது. விபத்து, தற்கொலை, கொலை போன்ற நிகழ்வுகள் நடக்கும் போது இத்தகைய போராட்டங்கள் வழக்கமாக நடக்கின்றன.இதன் மூலம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்வது மற்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது ஆகியவற்றை வலியுறுத்தி இப்படி போராட்டம் நடத்துகின்றனர். அவற்றை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க போலீஸ் மற்றும் அதிகாரிகள் முயற்சி மேற்கொள்வதற்குள், பதற்றம், பெரும் பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது. இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் போலீஸ் ஐந்தாவது கமிஷன் அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.ராஜஸ்தானில் இறந்தவர் உடல் மரியாதைச் சட்டம், 2023 ஐப் போலவே தமிழகத்திலும் சட்டம் இயற்ற வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான கமிஷன் முதல்வர் ஸ்டாலினுக்கு அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இறந்த ஒவ்வொருவருக்கும் கண்ணியத்துடன் இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும். குடும்பத்தினர் உடலை உரிமை கோர மறுத்தால் அல்லது சடலத்தை அடக்கம் செய்ய மறுத்தால், மாநில அதிகாரிகள் இறுதிச் சடங்குகளைச் செய்து உடலை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இறுதி சடங்கில் இடையூறு செய்வது, சடலத்தை சாலையில் கடத்தி போராட்டம் நடத்துபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

சுந்தர்
ஏப் 01, 2025 07:05

AI உருவாக்கிய வெளிநாட்டினர் படம் நம் செய்திக்கு பொருத்தமாக இல்லை.


Sampath Kumar
மார் 31, 2025 17:00

இங்கு சட்டமே சடலமாகத்தான் இருக்கு சந்திரசுட்டிசம் ஆகி பல நாட்கள் தொடர்கிறது போலீஸ்க்கு தெரியாதா


Kundalakesi
மார் 31, 2025 14:28

என்கவுன்டர் தடை சட்டம் கொண்டு வரலாமே. மாவு கட்டு தடை சட்டம் கூட


lana
மார் 31, 2025 13:54

நாங்கள் எதிர்கட்சி ஆக இருந்தால் எல்லா போராட்டம் சரி தான். ஆளுங்கட்சி ஆகி விட்டதால் அனைத்து வகையான போராட்டம் க்கும் தடை விதிக்க வேண்டும்


Padmasridharan
மார் 31, 2025 13:16

சடலத்தை மருத்துவமனைகளில் குடும்பத்திற்கு தரும்பொழுது பணம் வாங்குவது, மயானத்தில் அதை எரிக்க, வண்டியில் எடுத்து செல்லும்போது பணம் வாங்குவது போன்ற குற்றங்களுக்கு தடை விதித்து சட்டங்கள் கூட இயற்றலாமே


தமிழ்வேள்
மார் 31, 2025 12:59

போலீஸ் துறை, அரசியல்வாதியின் அல்லக்கை ஆகாமல் இருந்தால், நேர்மையாக இருந்தால், மக்கள் ஏன் போராடப்போகிறார்கள்? அரசியல்வாதி சொல்படி ஆடுவது, பொதுமக்களை மிரட்டுவது, குற்றவாளிக்கு, அவன் குற்றவாளி என்பது தெரிந்தே துணைபோவது போன்றவை போலீசின் வாடிக்கையாக இருப்பதால் மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள் .....தவறு போலீஸ் மீதுதான் ..


sridhar
மார் 31, 2025 12:31

அனுமதி இல்லாத எந்த போராட்டத்தையும் போலீஸ் இருக்கும் சட்டத்தை வைத்துக்கொண்டே தடுக்கலாம் .


rama adhavan
மார் 31, 2025 12:18

இறந்தவர்கள் மரணத்தில் சந்தேகம் இருந்தால், போலீஸ் இறப்பிற்கு பொய் சொன்னால் லாக்கப், என்கவுண்டர், போலீஸ் அராஜக மரணங்கள் , போஸ்ட் மாட்ட சந்தேகங்கள், முதலியவற்றில் உடலை உறவினர்கள் வாங்க மறுப்பது சரியே. எனவே உடலை போலீஸ் எரித்தால் எங்கே ஞாயம் கிடைக்கும்?


Ramesh Sargam
மார் 31, 2025 12:09

சடலத்துடன் போராட்டம் நடத்துவதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என நான் பலமுறை கருத்து தெரிவித்து இருக்கிறேன். இப்ப போலீஸ் கமிஷன் பரிந்துரைக்கிறது. இதற்காவது செவிசாய்ப்பார்களா சம்பந்தப்பட்டவர்கள். குறிப்பாக அரசியல்வாதிகள் சடலத்தை வைத்து அசிங்க அரசியல் dirty politics செய்வதை தடுக்க முதலில் சட்டம் இயற்றவேண்டும்.


KRISHNAN R
மார் 31, 2025 11:29

பின்புலம் உள்ளவர்களுக்கு.. அதிகாரிகள் எல்லா நிலையிலும் சென்று விசாரிக்கிறார்கள். ஆனால் ஏழைகள்?


முருகன்
மார் 31, 2025 12:30

தலையில் துண்டு போட்டு கொண்டு இருக்க வேண்டியது தான் சட்டம் அனைவருக்கும் பொதுவானது என எழுத்தில் மட்டும் இருக்கக்கூடாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை