உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் மற்றும் ஆதின சொத்துகளை ஆக்கிரமிப்பதை நிறுத்த வேண்டும்; அண்ணாமலை எச்சரிக்கை

கோவில் மற்றும் ஆதின சொத்துகளை ஆக்கிரமிப்பதை நிறுத்த வேண்டும்; அண்ணாமலை எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:'' திமுக அரசு, கோவில் சொத்துக்களையும், ஆதீன சொத்துக்களையும் அத்துமீறி ஆக்கிரமிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pvsfbydm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மயிலாடுதுறையில், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்ட மருத்துவமனை சுமார் 60 ஆண்டுகளாக, ஆதீனம் சார்பாக, பொதுமக்களுக்கு இலவச மருத்துவச் சிகிச்சை வழங்கி வந்துள்ளது. பின்னர், நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, நகராட்சி இலவச மகப்பேறு மருத்துவமனையாகச் செயல்பட்டு வந்திருக்கிறது. மயிலாடுதுறை நகராட்சியின் பராமரிப்பின்மை காரணமாக, கடந்த சுமார் ஏழு ஆண்டுகளாகச் செயல்படாமல் இருந்த மருத்துவமனையில் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி புதிய குப்பை நுண்ணுயிர் கிடங்கை, நகராட்சி நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. தற்போது நுண்ணுயிர் கிடங்கும் செயல்படாமல், குப்பைகள் குவிந்து அப்பகுதியே சுகாதார சீர்கேடாகக் காணப்படுகிறது.தருமபுரம் ஆதீனம் சார்பாக, தாங்கள் உருவாக்கிய மருத்துவமனையை, மீண்டும் ஆதீனமே பராமரித்து நடத்த, நகராட்சிக்குக் கடிதம் எழுதியும், நகராட்சி சார்பில் எந்த பதிலும் அளிக்காமல், கடந்த 2023 ஆம் ஆண்டு, மருத்துவமனை கட்டிடத்தை இடிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதற்கு, தருமபுரம் ஆதீனம் மற்றும் தமிழக பாஜ கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பேசாமல் இருந்த மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம், தற்போது மீண்டும் மருத்துவமனை கட்டிடத்தை இடிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. தருமபுரம் ஆதீனம், இதனைக் கண்டித்து, சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். பொதுமக்கள் நலனுக்காக, தருமபுரம் ஆதீனம் தொடங்கிய இலவச மருத்துவமனையைக் கைப்பற்றி, அரசின் கையாலாகாத்தனத்தால் இன்று அதன் நோக்கத்தையே சிதைத்து, குப்பைமேடாக ஆக்கி வைத்திருக்கிறது மயிலாடுதுறை நகராட்சி.முதல்வர் ஸ்டாலினுக்குக் குப்பைமேடு அமைக்க வேண்டுமென்றால், உங்கள் கட்சிக்காரர்கள் ஆக்கிரமித்து வைத்திருக்கும் அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு, அதில் அமைத்துக் கொள்ள வேண்டும். தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இடத்தில் அமைந்திருக்கும் மருத்துவமனைக் கட்டிடத்தை இடித்துவிட்டு, அதில் குப்பைமேடு அமைக்க முடிவெடுத்திருப்பது, உங்கள் அரசின் வழிப்பறி.திமுக அரசு, கோவில் சொத்துக்களையும், ஆதீன சொத்துக்களையும் அத்துமீறி ஆக்கிரமிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறேன். மயிலாடுதுறை இலவச மருத்துவமனை அமைந்திருக்கும் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இடத்தை, உடனடியாக தருமபுரம் ஆதீனத்திடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

N S
அக் 08, 2025 06:27

அப்பாவின் ஆணை - "எத்தனை ஆதினம் இருக்குனு கணக்கு எடுப்பா, சேகரு".


pmsamy
அக் 08, 2025 06:20

ஆடு மாடுகளை எப்படி வளர்க்க வேண்டும் எப்படி மேய்க்க வேண்டும் என்று அண்ணாமலை பேசினால் அது பொருத்தமாக இருக்கும் தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவது அண்ணாமலையின் அறிவின்மை


Kasimani Baskaran
அக் 08, 2025 04:08

அறநிலையத்துறை அராஜகத்துறை என்பது அனைவருக்கும் தெரியும். ஓராண்டுக்கு உண்டியல்களில் பணம் போடப்படவில்லை என்றால் திருடர்கள் தானே கோவிலை விட்டு வெளியேற வாய்ப்பு அதிகமிருக்கிறது.


Ramesh Sargam
அக் 08, 2025 01:24

கோவில் மற்றும் ஆதீன சொத்துக்களை திருட்டுத்தனமாக ஆட்டைபோட்டு ஆக்கிரமித்து அனுபவிக்கும் கும்பலிடம் இருந்து அவைகள் மீட்கப்பட்டு அவைகள் மீண்டும் கோவிலுக்கும், ஆதீனத்துக்கு கொடுக்கப்படவேண்டும். திருட்டுத்தனமாக ஆடைபோட்டவர்களை சிறையில் அடைத்து தண்டிக்கவேண்டும்.


மணிமுருகன்
அக் 07, 2025 23:04

அருமை அயர்லாந்தி வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல் கட்சி திமுகா கூட்டணியின் கலாச்சாரமே அடுத்தவர்கள் சொத்தை பிடுங்குவது தான் அதுவும் ஆதினம் என்றால் போது எப்படி ஏமாற்றலாம் என்றிருப்பார்கள் எடுத்துகாட்டு மதுரை ஆதினம் கண்டிப்பாக தர்மபுரம் ஆதினத்துடன் மக்கள் துணை நிற்கவேண்டும் கூடிய. விரைவில் ஆதினச் சொத்து ஆதினத்திடம் செல்ல வேண்டும் இல்லை என்றால் ஆதினத்துடன் மக்களும் இணைவார்கள் இவர்கள் காசுக்கு வருபவர்கள் இல்லை நீங்கள் கொல்வதற்கு என்பதை மறக்க வேண்டாம்


KRISHNAN R
அக் 07, 2025 22:17

அறநிலைய சட்டம், தவறான நிர்வாகம் இருந்தால் சரி செய்ய வேண்டும் என்ற நோக்கில் வந்தது ஆனால், நடைமுறை கேள்வி குறி ஆகி விட்டது


Guna Gkrv
அக் 07, 2025 21:51

அண்ணாமலை உமக்கு வேற வேலை இல்லையா ?


கல்யாணராமன்
அக் 07, 2025 22:42

அய்யாவுக்கு எங்கே வேலை? ஒயிட் ஹவுஸிலா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை