உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் வழக்கில் தடை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தகவல்

டாஸ்மாக் வழக்கில் தடை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'டாஸ்மாக்' முறைகேடு தொடர்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக மேல் நடவடிக்கை எடுக்க விதித்த தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்துள்ளது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, கடந்த மே 16ல், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில், அமலாக்கத் துறை சோதனை நடத்தி, ஆவணங்களை பறிமுதல் செய்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டு, அமலாக்கத் துறை நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என, தடை விதித்த பின்னும், டில்லியில் உள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை உதவி இயக்குனர் விகாஸ்குமாரை, நேற்று ஆஜராக உத்தரவிட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.சவுந்தர் அடங்கிய அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை உதவி இயக்குனர் விகாஸ்குமார் நேரில் ஆஜராகியிருந்தார். இதையடுத்து, அமலாக்கத் துறை தரப்பில் வாதாடியதாவது: ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரனுக்கு எதிராக மேல் நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. பதில் மனு தாக்கல் செய்யாததற்காக, அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்தும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்த்தும், மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு, அமலாக்கத் துறை தரப்பில் கூறப்பட்டது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், 'அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்த, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு தான், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் விசாரிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, ஏற்கனவே விசாரித்த அமர்வில் பட்டியலிட உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

NAGARAJAN
செப் 18, 2025 18:20

அமலாக்கத்துறை என்பதே ஒரு ஏமாற்று துறை. ஏதோ யோக்கியவான்கள் போல


Sivaram
செப் 18, 2025 13:01

டாஸ்மாக் அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்லியபடி திராவிட மாடல் முப்பெரும் விழா நேற்று முன்தினம் கரூரில் நடைபெற்றது தமிழன் இப்படியே எக்காலத்திலும் இருக்க வேண்டும் தொண்டர்கள் ஆகிய நீங்கள்தான் மக்களை எப்படியாவது முட்டாள்கள் ஆகவே வைத்திருக்க நீங்கள் இன்னமும் எங்கள் அடிமைகள் ஆகவே இருக்க வேண்டும்


Chandru
செப் 18, 2025 09:56

ED S GAME BEGINNING FROM NOW, A BIT EARLIER BY 15 DAYS.


Sundar R
செப் 18, 2025 09:53

குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் "ஜட்ஜை மாத்து" அல்லது "இந்த ஜட்ஜ் தான் வேணும்" என்று சொன்னால், குற்றம் சாட்டப்பட்டவனர் குற்றவாளி என்பது நிரூபணம் ஆகிவிடுகிறது. வழக்கு முடிந்து விட்டது. "ஜட்ஜை மாற்று" என்று சொல்பவனைக் கேட்டு ஒரு நீதிபதி ஜட்ஜை மாற்றினால், அந்த தொழிலுக்கு உள்ள மாண்பையும், மரியாதையையும் அந்த நீதிபதி அரசியல்வாதிகளிடம் அடகு வைத்து விட்டார் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. தர்மத்தை காக்க வேண்டி, நிலைநாட்ட வேண்டிய இடத்தில் இருக்கும் நீதிபதிகள் தங்கள் கடமையிலிருந்து தவறிவிட்டார்கள் என்று அர்த்தம். நாடு குட்டிச்சுவர் ஆகிவிட்டது என்பதற்கு இது ஒரு அடையாளம்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 18, 2025 11:07

நீதிபதிகள் அநீதிபதிகள் ஆகி அநீதி பாதையில் செல்கிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாக பணமூட்டைகள் எரிந்த போதே தெரிந்து விட்டது.


GMM
செப் 18, 2025 07:40

டாஸ்மாக் முறைகேட்டுக்கு எதிராக விசாரணை நிலையில் தடை விதிக்க முடியாது. தவறான வழக்கு பதிவு, நீதிபதிக்கு வழிகாட்டிய வழக்கறிஞர் விசாரணையில் சேர்க்க வேண்டும். விசாரணை நிலையில் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். மத்திய அரசை அரசாணை வெளியிட கேட்க வேண்டும். தடையை நிறுத்த கவர்னர் உத்தரவு பெற வேண்டும்.


SIVA
செப் 18, 2025 07:26

டாஸ்மாக்ல் எட் இன்னும் உயிரோடு இருக்குதா. டாஸ்மான் ஊழல் நிதி கவனிக்க வேண்டியர்களுக்கு கவனித்து ஆச்சு.


Iyer
செப் 18, 2025 05:52

ஊழல் அநீதிபதிகள் அதிகம் பணம் லஞ்சம் பெற உதவும் : 1. ஜாமீன் BAIL வழங்குவது 2. FIR ஐ QUASH செய்வது 3. விசாரிக்க தடை செய்வது 4. வழக்கு தேதி தள்ளிப்போடுவது நீதித்துறையில் ஊழல் நமது அரசியலை விட பல மடங்கு அதிகம். நமது SC மற்றும் HC க்களில் JUSTICES 60% மேல் ஊழலில் ஊறி திளைத்தவர்கள். அதுபோன்ற களை உடனே பதவி நீக்கம் செய்து அவர்களது சொத்துக்களை பறிக்கவேண்டும்


Rajasekar Jayaraman
செப் 18, 2025 05:39

அவர்கள் தான் திருட்டு திராவிடம் போட்ட பிச்சைகள்.


Kasimani Baskaran
செப் 18, 2025 03:55

ஏன் அதே நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்று கேட்டால் அவன் சங்கி. ஒருவேளை இதுதான் திராவிட நீதியோ இல்லை நெஞ்சுக்கு நீதியா...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை