உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் ஊழல் வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மாற்றம்

டாஸ்மாக் ஊழல் வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மாற்றம்

சென்னை:டாஸ்மாக் ஊழல், கனிமவளக்கொள்ளை, முன்னாள் அமைச்சர்களின் சட்ட விரோத பணப்பரிமாற்றம் வழக்குகளில் அதிரடி காட்டிய, சென்னை மண்டல அமலாக்கத்துறை அதிகாரிகள் இருவர், திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.முன்னாள் அமைச்சர்களான, தி.மு.க.,வை சேர்ந்த செந்தில்பாலாஜி, பொன்முடி, அ.தி.மு.க.,வை சேர்ந்த வைத்திலிங்கம் உள்ளிட்டோர் மீதான, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்குகளின் விசாரணை, சென்னை மண்டல அமலாக்கத்துறை இணை இயக்குனர் பியூஸ் குமார் யாதவ், துணை இயக்குனர் கார்த்திக் தாசரி ஆகியோர் தலைமையில் நடந்து வந்தது.செந்தில் பாலாஜி கைதில், இருவரும் முக்கிய பங்கு வகித்தனர். அதேபோல, டாஸ்மாக் தலைமை அலுவலகம், அதன் மேலாண் இயக்குநர் விசாகன் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி, 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்து இருப்பதை, இந்த இரு அதிகாரிகளும் அம்பலப்படுத்தினர். தி.மு.க., முக்கிய புள்ளிகளின் நெருங்கிய உறவினரான ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் ரத்தீஷ் வீடுகளிலும் சோதனை நடத்தினர்.இந்நிலையில், பியூஸ் குமார் யாதவ், கார்த்திக் தாசரி ஆகியோர், திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் வருமான வரித்துறையில் இருந்து, அயல் பணியாகத்தான் அமலாக்கத்துறை பணிபுரிந்தனர். தற்போது டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு, நீதிமன்றம் தடை விதித்துள்ளது.அதனால், இருவரும் மீண்டும் வருமான வரித்துறைக்கே மாற்றப்பட்டு இருப்பதாக, அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ