உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் நேரு குடும்ப நிறுவனங்களில் 11 மணி நேர அமலாக்கத்துறை ரெய்டு நிறைவு!

அமைச்சர் நேரு குடும்ப நிறுவனங்களில் 11 மணி நேர அமலாக்கத்துறை ரெய்டு நிறைவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர் உள்ளிட்ட 13 இடங்களில் அமைச்சர் நேரு குடும்ப நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.தமிழக அமைச்சர் நேருவின் சகோதரர்கள் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். அவர்களது நிறுவனங்கள் மீது பல்வேறு கால கட்டங்களில் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.இத்தகைய சூழ்நிலையில், கே.என்.நேருவின் குடும்பத்தினருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்களில் 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3ud8zvw2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

நேரு மகன் வீட்டில் சோதனை

சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடக்கிறது. ஆழ்வார்பேட்டையில் அமைச்சர் கே.என். நேருவின் மகனும், பெரம்பலூர் தொகுதி எம்.பி.,யுமான அருணுக்கு சொந்தமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.திருச்சி தில்லைநகரில் அமைச்சர் நேருவின் மகன் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. நேருவின் சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடந்தது.

கோவையிலும் ரெய்டு

கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். என்ன காரணம்இதில் ட்ரூடம் இ.பி.சி., என்ற நிறுவனம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 22 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பான வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் இயக்குனராக உள்ளார்.இந்த வழக்கு தொடர்பாகவும், நேரு குடும்பத்தினர் நடத்தும் கட்டுமான நிறுவனங்களில் நடக்கும் பண முறைகேடுகள் தொடர்பாகவும் ரெய்டு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது தொடர்பாக, இன்று காலை 7 மணி முதல் நடத்தப்பட்ட அமலாக்கத்துறையினரரின் ரெய்டு, 11 மணி நேரத்துக்கு பிறகு முடிவுக்கு வந்தது. ஏராளமான ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 96 )

Dr.C.S.Rangarajan
ஏப் 13, 2025 22:06

அழகான வலைதனை பின்னி அவ்வலையில் தானே அறியாமல் சிலந்தி மாட்டிக் கொண்டபின் தான் பின்னியது அழகுக்கு அழகு சேர்க்காத பின்னலினமோ என எண்ணித் துணியாத கர்மமோ என எண்ணலாமா? அதுவன்றி, சிலந்தியின் பின்னலை பின்னின்று இழுத்தவன் யாராக இருக்கக்கூடும்?


S.V.Srinivasan
ஏப் 09, 2025 08:12

சோதனையெல்லாம் சரி. என்ன கண்டுபிடித்தீர்கள், எவ்வளவு கண்டுபிடித்தீர்கள். நடவடிக்கை எடுக்க படுமா இல்லையா. ஆரம்பம் என்னவோ ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கிளம்புற ராக்கெட் வேகத்துல கிளம்புது. கடைசியில் பார்த்தா தீபாவளி புஷ்வாணம் ஆயிடுது. கொள்ளை அடிச்சவங்க நல்லவங்க அமலாக்க துறை வேஸ்ட் என்பதுதான் நடக்குது. என்னவோ போடா மாதவா .


Keshavan.J
ஏப் 07, 2025 21:45

நேரு வீட்டில் ரைட் என்றவுடன் 200 ரூபீஸ் உபீஸ் புலம்பல் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு.


baala
ஏப் 10, 2025 10:10

இந்த 200 ரூபாய்க்கு எப்படி பதிவு செய்வது.


Thetamilan
ஏப் 07, 2025 21:19

அமலாக்கத்துறை மோடி அரசு அம்பானி அதானி நிறுவனங்களுக்கு எதிரான ஆதாரங்களை சேகரிக்கவில்லையா?. சேகரிக்கமுடியவில்லையா?. கிடைத்த ஆதாரங்களை அழித்துவிட்டார்களா ? மத்திய அமைப்புகள் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகிவிட்டனவா?


xyzabc
ஏப் 14, 2025 12:40

மாடல் ஆட்சியில் ஒவ்வொரு அமைச்சருக்கும் முன்பே அம்பானி அதானி ஒரு தூசி


மதிவதனன்
ஏப் 07, 2025 21:18

அண்ணாமலை பாவ யாத்திரை சென்ற பொது கோடி கணக்கில் வசூல் செய்தார் என்று செங்கை சீனிவாசன் சொன்னா , இது தான் இவன் பவிசு , இவனை ED ரைட் செய்தால் 1000 கோடி எடுக்கலாம் ஆனா பிஜேபி ஆட்கள் எல்லாம் புனிதர்களா


வாய்மையே வெல்லும்
ஏப் 11, 2025 09:57

திருட்டு திராவிட கூட்டம் புளுகு மூட்டைய அவிழ்த்துவிட்டு கலகம் செய்ய பார்க்குது அப்பட்டமாக தெரியுது. நீங்க தான் நேர்மையான ஆளாச்சே உச்ச நீதிமன்றத்தில் இப்போதே மனு போட்டு பாருங்க. செய்ய திராணி இருக்கா? இருக்காது. அம்புட்டு களவாணித்தனம் சென்ஜட்டு ராவடி தான் உங்களுக்கு குறைச்சல் .. வெட்கக்கேடு மாடல் அரசு ஒழியவேணும்


Thetamilan
ஏப் 07, 2025 21:14

இந்திய வங்கிகளில் பல லட்சம் கோடிகள் மோசடிநடந்துள்ளது . அதிலெல்லாம் துப்பு கிடைத்துவிட்டதா? ED க்கு மத்திய அரசு கொடுத்துள்ள வேலைகள் என்ன ?


venugopal s
ஏப் 07, 2025 20:24

அமலாக்கத்துறை அடுத்து பாஜகவுக்கு எதிராக இங்கு கருத்துக்கள் பதிவு செய்பவர்கள் வீடுகளில் ரெய்டு நடத்த வேண்டியது மட்டும் தான் பாக்கி! காமெடி பண்ணுகின்றனர்!


GoK
ஏப் 07, 2025 20:53

செய்தாலும் தப்பேதுமில்லை இன்னும் சில களவாணி கள் உள்ளே போனால் நாட்டுக்கு நல்லதுதான்.


மீனவ நண்பன்
ஏப் 07, 2025 20:56

காமெடியா தெரியுதா


சி ரதி
ஏப் 08, 2025 08:05

உங்கள் வீட்டில் ரெய்டு வரும் போல..


வாய்மையே வெல்லும்
ஏப் 11, 2025 09:59

காமெடிக்கு இங்கு இடம் இல்ல.. திருட்டுத்தனம் செய்தவனை பிடிச்சா விடமாட்டார்கள். ஜாக்கிரதை.. மானம் கப்பலேறுவது உறுதி.. திருட்டு திராவிட அரசு ஒழிக


வல்லவன்
ஏப் 07, 2025 19:45

அதிரடி சரவெடி கடைசியில் புஸ்வானம் இடிக்கு போர் அடித்திருக்கும் சும்மா ஒரு ஜாலி விசிட்


ஆரூர் ரங்
ஏப் 07, 2025 19:27

இதுக்கு நேரு தான் காரணம்.


baala
ஏப் 09, 2025 11:09

ஆம் எல்லாவற்றுக்குமே நேரு தான் காரணம்.


தாமரை மலர்கிறது
ஏப் 07, 2025 18:59

செந்தில் பாலாஜி மாதிரி ஜெயிலுக்கு போகபோகும் அடுத்த மங்குனி மந்திரி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை