உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தமிழக வளர்ச்சியால் பா.ஜ.,வுக்கு பொறாமை

 தமிழக வளர்ச்சியால் பா.ஜ.,வுக்கு பொறாமை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தின் வளர்ச்சியை கண்டு பொறாமைப்படும் மத்திய பா.ஜ., அரசு, மத்திய -- மாநில அரசு உறவில் கருப்பு அத்தியாயத்தை ஏற்படுத்துவதாக, தி.மு.க., - எம்.பி.,க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நாளை துவங்கி, வரும் 19ம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்நிலையில், தி.மு.க., - எம்.பி.,க்கள் கூட்டம் நேற்று, சென்னையில் தி.மு.க., தலைமையகமான அறிவாலயத்தில் நடந்தது. தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில், பொதுச்செயலர் துரைமுருகன், பார்லிமென்ட் தி.மு.க., குழு தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கட்சியின் லோக்சபா எம்.பி.,க்கள், 22 பேர், ராஜ்யசபா எம்.பி.,க்கள், 10 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: பீஹார் தேர்தலில், பா.ஜ., கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளதால், பார்லிமென்ட் கூட்டத் தொடரில், எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க பார்ப்பர். தமிழகத்தில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு, கோவை விமான நிலைய விரிவாக்கம் இழுத்தடிப்பு போன்ற பிரச்னைகளை, பார்லிமெனட்டில் கிளப்ப வேண்டும். தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசை, அம்பலப்படுத்தி, எல்லா விஷயங்களிலும் கடும் நெருக்கடி கொடுக்க வேண்டும். அதற்காக ஒவ்வொரு தி.மு.க., -எம்.பி.,யும் தக்க ஆதாரங்களுடன் தயாராக இருக்க வேண்டும் இவ்வாறு அவர் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து, கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விபரம் வருமாறு: தமிழகத்தின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படும் மத்திய பா.ஜ., அரசு, நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. ஆனால், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதியை வாரி வழங்குவது கண்டிக்கத்தக்கது. கவர்னர் வாயிலாக அராஜகத்தில் ஈடுபட்டு, கூட்டாட்சி கருத்தியலை மத்திய அரசு சிதைக்கிறது. தமிழக திட்டங்களை முடக்கி வைத்து, மத்திய -- மாநில அரசு உறவில், கருப்பு அத்தியாயத்தை உருவாக்கி இருப்பது கண்டனத்திற்குரியது. கும்பகோணம் கலைஞர் பல்கலை சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறவும், கவர்னருக்கு கால நிர்ணயம் செய்யவும், பார்லிமென்டில் குரல் எழுப்ப வேண்டும். செறிவூட்டப்பட்ட அரிசியை தாமதமின்றி வழங்குவதோடு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை, 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய, கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம்; 3,548 கோடி ரூபாய் சமக்ர சிக்ஷா நிதியை உடனே விடுவிக்க வேண்டும். இது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 'குட்ட குட்ட குனிய மாட்டோம்! பதில் சொல்லியே ஆக வேண்டும்' முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: மிகப்பெரிய ஜனநாயக நாடு என பெருமையாகச் சொல்லிக் கொண்டே, தமிழக மக்களின் குரலை மத்திய பா.ஜ., அரசு புறக்கணிப்பது சரியா? தமிழக கோரிக்கைகளை, கடிதங்களாகவும், நேரில் மனுக்களாகவும், சட்டசபை தீர்மானங்களாக எடுத்துச் சொல்லியும், காதில் வாங்காமல் இருப்பது நியாயமல்ல. அதிக வரி வருவாயைத் தரும் மாநிலமான தமிழகத்திற்கு வஞ்சனை செய்வதை, மனசாட்சியுள்ள யாரும் ஏற்க மாட்டார்கள். மத்திய அரசின் வஞ்சனைகளை கடந்துதான், நாட்டிலேயே அதிகமான, 11.19 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம். வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில், தமிழக எம்.பி.,க்களிடம் மத்திய பா.ஜ., அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Indian
நவ 30, 2025 08:49

பா ஜா வை விட மிக ஆபத்தானது, தமிழ் நாட்டிலே இருந்து கொண்டு தமிழ் காற்றை சுவாசித்துக்கொண்டு தமிழ் மண்ணுக்கு எதிராக கருத்து எழுதும் மக்கள் . மிக ஆபத்தானவ்ரகள்


bharathi
நவ 30, 2025 08:48

Yes TASMAC growth really bothering.


xxxx
நவ 30, 2025 08:40

ஹாஹா.... உண்மை உண்மை நம்புநாதன் 2..


Rajasekar Jayaraman
நவ 30, 2025 08:28

அட ......


Ambedkumar
நவ 30, 2025 08:21

உத்தர பிரதேசம் யோகி ஆதித்யநாத்தின் தலைமையில் எவ்வாறு அதிவேக வளர்ச்சி கண்டுவருகிறது என்பதைப்பற்றி ஒரு சிறப்பான கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது. அங்கே கடன் இல்லை. மாறாக உபரி வருவாய் தமிழகம் இந்தியாவிலேயே மிக அதிக பொதுக்கடன் கொண்ட மாநிலமாகத் திகழ்வதுதான் பொறாமை?


GMM
நவ 30, 2025 08:18

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம். கோவை தனி யூனியன் பிரதேசம். OK. திமுக செல்வாக்கு இல்லாத கோவை போன்ற நகரை வளர விடுவது இல்லை. மத்திய, மாநில அதிகார பகிர்வு என்பது சட்ட படி கிடையாது. மத்திய அரசு கீழ் மாநிலம். மாநில நிர்வாகம் கீழ் உள்ளாட்சி அமைப்புகள். கூட்டணி ஆட்சி உண்டு. கூட்டாட்சி கிடையாது. மாநில முப்படை தலைவர் கவர்னர். நிர்வாக தலைவர் தலைமை செயலர். மாநில திராவிட அரசியல் கட்சிகள் வழிப்போக்கர். அரசியல் சாசனம் ஒரு வரி அதிகாரம் கூட கட்சிகளுக்கு கொடுக்கவில்லை. பரிந்துரை மட்டும் தான். மசோதா என்பது பரிந்துரை.


ram
நவ 30, 2025 08:13

நல்ல வளர்ச்சிதான்.. உங்களோட சொத்து மதிப்பு நல்ல வளர்ச்சிதான்...


GSR
நவ 30, 2025 08:11

எந்த வளர்ச்சியை கண்டு பொறாமையோ?


VENKATASUBRAMANIAN
நவ 30, 2025 08:05

நல்ல காமெடி. பொய்யிலே பிறந்த கட்சி எப்படி இருக்கும். எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்கள்


kumaran
நவ 30, 2025 07:54

பொய்யுறைத்தால் மெய்வருந்தி கூச்சம் வருமே அது எங்கே போனது ஒரு வேளை பணம் பதவி வஞ்சகம் சூதுபோன்ற திரைகள் மறைத்திருக்கும்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ