உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக.,வின் ஊதுகுழலாக செயல்படும் இபிஎஸ்: ஓபிஎஸ் கண்டனம்

திமுக.,வின் ஊதுகுழலாக செயல்படும் இபிஎஸ்: ஓபிஎஸ் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திமுக.,வின் ஊதுகுழலாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் செயல்படுவதாகவும், சுயநலத்திற்காக அவர் திமுக.,விடம் சரணாகதி அடைந்துவிட்டதாகவும், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையில் இரட்டை நிலைப்பாட்டினை எடுத்து தி.மு.க.,வின் ஊதுகுழலாக செயல்படும் இபிஎஸ்.,க்கு கடும் கண்டனங்கள். 2022ல் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின்போது, ''ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் 2024ல் சட்டசபைக்கு தேர்தல் வரும், இந்த ஆட்சியும் மாறும், காட்சியும் மாறும்'' எனக் கூறியவர் இபிஎஸ். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kz4y8yp5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை கொள்கையை அதிமுக ஆதரிக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். தற்போது இதிலிருந்து அந்தர் பல்டி அடித்திருக்கிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோட்பாட்டினை எதிர்த்து கடந்த பிப்.14ல் சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானம் அதிமுக.,வின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதிலிருந்து திமுக., உடன் கைகோர்த்துவிட்டார் இபிஎஸ் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. எந்த திமுக என்ற தீயசக்தியை எதிர்த்து எம்.ஜி.ஆர் கட்சியை துவங்கினாரோ, எந்த திமுக.,வை எதிர்த்து ஜெயலலிதா கட்சியை வளர்த்தாரோ, அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, திமுக.,வுடன் கைகோர்த்திருப்பது, ரகசிய உடன்பாடு செய்திருப்பது என்பது வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதற்கு அடையாளம். ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு முற்றிலும் முரணாக இபிஎஸ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சுயநலத்திற்காக திமுக.,விடம் சரணாகதி அடைந்துவிட்டார். கட்சியின் தனித் தன்மை தாரைவார்க்கப்பட்டு விட்டது. வரும் லோக்சபா தேர்தலில் துரோக கூட்டம் 4வது இடத்திற்கு மக்களால் துரத்தி அடிக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Bala
பிப் 17, 2024 02:41

எடப்பாடியால் அதிமுக அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. ஊழல் மந்திரிகளால் திமுக அதலபாதாளத்துக்கு சென்று கொண்டு இருக்கிறது. இப்பொழுது இரண்டு திராவிட கட்சிகளும் கைகோர்த்துவிட்டன. பாஜகவிற்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது


K.Ramakrishnan
பிப் 16, 2024 21:59

இது நாள் வரைக்கும் அந்த சீட்­டுல உங்­க­ளை உட்­கார வைச்­சி­ருந்­தாங்­க.. அப்ப தி.மு.க.வின் ஊது­குழல் ஓபிஎஸ் என்­றார்கள். இப்­போது சீட் பறி­போ­னதும் அவரு ஊது­கு­­ழலா... என்ன அர­சி­ய­லப்பா இது.. ஜெய­ல­லி­தாவின் எண்­ணமே இந்த லேடியா.. அந்த மோடியா... என்ற கர்­ஜனை தான். அதை மீறி இப்­போது மோடி பின்னால் ஓபிஎஸ் போவ­து­, பா.ஜன­தாவிடம் சர­ணா­கதி தானே...


Vijay D Ratnam
பிப் 16, 2024 20:15

எடப்பாடி பழனிசாமி அதிமுகவை எந்த சேதாரமும் இல்லாமல் பக்காவாக முழுமையாக கைப்பற்றிவிட்டார். கட்சியை கைப்பற்ற நினைத்த சசிகலாவை காலி பண்ணினார், அடுத்து முதலமைச்சர் பதவியை கைப்பற்ற துடித்த டிடிவி.தினகரனை கட்சியை விட்டு துரத்தி விட்டுவிட்டார். அடுத்து கூடவே இருந்து குழிபறித்துக்கொண்டு இருந்த பன்னீரை அரசியல் அநாதையாக்கி நடுத்தெருவில் நிறுத்திவிட்டார். இனி பன்னீர் என்னதான் விழுந்து புரண்டு ஒப்பாரி வைத்தாலும் ஒன்னும் கதைக்காவாது. பாஜக கைகொடுக்கும் என்று இருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி வச்சாரு பாருங்க ஆப்பு வகையா முறையா காலை சுத்துன பாம்பு பாஜகவுக்கு. இனி பாஜக நிலைமை மறுபடியும் நோட்டாவோட போட்டி போடும் நிலைக்கு வந்துவிட்டது. ஒரு விஷயம் புரியவே மாட்டேங்குது. எள்ளுதான் என்னைக்கு காயுது, இந்த எலிப்புழுக்கை வைத்தியலிங்கம் எதுக்கு காயுறார்.


rasaa
பிப் 16, 2024 16:25

உண்மை. இ.பி.எஸ். தன் மதிப்பை, கட்சி மதிப்பை குறைத்துவிட்டார்


செந்தமிழ் கார்த்திக்
பிப் 16, 2024 12:58

தாமரை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்த போகிறவர் இப்படி தான் கதறுவார். அதிமுகாவில் இருந்து முற்றிலும் ஒதுக்க பட்டார், இனிமேல் எக்காலத்திலும் அதிமுகாவில் இணைய வாய்ப்பே இல்லை. அந்த கடுப்பின் வெளிப்பாடு தான் இது.


Sampath Kumar
பிப் 16, 2024 12:11

neenga bjpin ஓத்து குழலாக இருக்கும் பொது அவரு தீ முகவிற்கு இருக்கிறார் இதில் என்ன தவறு


Kadaparai Mani
பிப் 16, 2024 12:10

எடப்பாடி பழனிசாமி மகனா ஸ்டாலின் நன்றாக ஆட்சி செய்வதாக சொன்னார் .துரைமுருகன் போட்டு கொடுத்திராவிட்டால் உண்மை மக்களுக்கு தெரிந்திருக்காது .உன்மகன் ரவீந்திரநாத் ஸ்டாலினை சந்தித்த காரணம் பொதுமக்களுக்கு விளக்குங்கள்


Samy Chinnathambi
பிப் 16, 2024 11:57

திமுக அருமையாக ஆட்சி நடத்துகிறதுன்னு சர்டிபிகேட் கொடுத்தது யாரு?


duruvasar
பிப் 16, 2024 11:53

அது ஊதுகுழல் இல்லீங்க. புல்லாங்குழல்.


R GANAPATHI SUBRAMANIAN
பிப் 16, 2024 11:29

பங்காளிகளுக்குள் இதெல்லாம் சகஜமப்பா. தேர்தல் சமயத்தில், அப்படி தான் தொகுதிகளை பிரித்து கொள்ளுவார்கள். இது கூட புரியாமல் தான் தமிழர்கள் டுமீளர்கள் ஆகி விட்டனர்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை