உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செங்கோட்டையன் பற்றி பேசுவதை தவிர்த்தார் இபிஎஸ்

செங்கோட்டையன் பற்றி பேசுவதை தவிர்த்தார் இபிஎஸ்

கம்பம்: தேனி மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பற்றி பேசுவதை முற்றிலும் தவிர்த்தார்.'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தில் தேனி மாவட்டம் கம்பத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசியதாவது: இப்பகுதி மக்களுக்கு நீர் ஆதாரம் முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையை பலப்படுத்த அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், முதல்வர் கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளைப் பற்றியோ, அவர்கள் படும் கஷ்டங்களைப் பற்றியோ ஸ்டாலினுக்கு எதுவும் தெரியாது. கிடைக்கின்ற சந்தர்பத்தை மக்கள் நன்மைக்கு முழுமையாகப் பயன்படுத்துவதுதான் உண்மையான அரசு. இன்று ஆடுதுறை பேரூராட்சியில், பேரூராட்சி தலைவர் மீது வெடிகுண்டு வீசியிருக்கிறார்கள். அவர் அருகில் இருந்த இருவர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். அவர் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. குற்றவாளிகள் போலீசாரைத் தாக்குகிறார்கள். போலீசையே தாக்குகிறார்கள் என்றால் மக்களை பாதுகாப்பது யார்…? போலீசைக் கண்டு குற்றவாளிகளுக்கு பயமே இல்லை. தமிழக மக்கள் வாழ்விலும், வளர்ச்சியிலும் சரிவை சந்தித்துவருகிறது. விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. இன்றைய ஆட்சியாளர்கள் குடும்பத்தை மட்டும் பற்றியே கவலைப்படுகிறார். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி வரைக்கும் வந்துவிட்டனர். இவர்கள்தான் நாட்டை ஆளவேண்டுமா? ஏழை, விவசாயத் தொழிலாளி, தாழ்த்தப்பட்ட, மலைவாழ், மீனவ மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும். அதிமுகவின் பிரதான தேர்தல் அறிக்கை இதுதான். இவ்வாறு அவர் பேசினார்.

செங்கோட்டையன் பற்றி மவுனம்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை பேட்டி கொடுத்தார். அப்போது, கட்சியில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் அரவணைக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு 10 நாள் காலக்கெடு விதிக்கிறேன் என்று கூறியிருந்தார். இதைப் பற்றி இபிஎஸ் பேசுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், இபிஎஸ் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மிரட்டி உறுப்பினர் சேர்ப்பு

போடியில் இபிஎஸ் பேசியதாவது: மின்கட்டணம் இந்த ஆட்சியில் 67% உயர்த்திவிட்டனர். தொழிற்சாலை, கடைகளுக்கு பீக் ஹவர் கட்டணம் என்று தனியாக வசூலிக்கிறார்கள். அப்போதும் கூட மின்சார வாரியம் கடனில்தான் தத்தளிக்கிறது. பத்திரப்பதிவில் 10% கமிஷன் கேட்கிறார்கள், அதிகாரிகள் மேலிடத்துக்குக் கொடுக்க வேண்டும் என்று வசூல் செய்த பின்னர்தான், பதிவு செய்கிறார்கள்.. நல்லாட்சி என்றால் ஒரு அரசில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்களை தொடர வேண்டும்.திமுகவில் அவர்கள் குடும்பம் மட்டுமே சிறப்பாக இருக்கிறார்கள், வேறு யாருமே இந்த ஆட்சியில் மகிழ்ச்சியாக இல்லை. கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. இனி ஏழை மக்கள் வீடுகட்டவே முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. இரவில் கனவில் வேண்டுமானால் வீடு கட்டலாம். பல கட்டடங்களை இன்று முழுமை பெறவில்லை, ஏழைகளால் வீடு கட்டவே முடியவில்லை. சதுரங்க வேட்டை படத்தின் வசனம் போன்று ஆசையைத் தூண்டி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரவே விளம்பரம் செய்கிறார்கள். மக்கள், தொண்டர்கள் செல்வாக்கை திமுக இழந்துவிட்டதால் வீடுவீடாகச் சென்று எங்கள் கட்சியில் சேர்ந்துகொள்ளுங்கள் என்று கெஞ்சும் கேவலமான நிலைக்குச் சென்றுவிட்டனர். அப்படி கேட்டும் யாராவது கையெழுத்துப் போடவில்லை என்றால் உங்களுக்கு உரிமைத் தொகை நிறுத்திவிடுவோம் என்று மிரட்டி, இதுவரை 90 லட்சம் உறுப்பினர்கள் சேர்த்தார்களாம். உண்மையாக சேர்த்தார்களா..? மிரட்டித்தானே சேர்த்தார்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Kumar
செப் 05, 2025 23:09

அப்போ 2026 ல காணாம போய்டுவீங்கல்ல?


Raja k
செப் 05, 2025 22:59

அமித்சாவின் கொள்கை பரப்பு செயலாளர் எடபாடி,,


முருகன்
செப் 05, 2025 22:59

இவருக்கு பத்து நாட்கள் தான் டைஞ அதன் பிறகு குடைச்சல் ஆரம்பம் இவர் ஒன்றும் புரட்சி தலைவர் தலைவி இல்லை என்று யாராவது புரியவைக்க வேண்டும்


pakalavan
செப் 05, 2025 22:23

எடப்பாடிய ஒருத்தரும் சீண்டகூட இல்ல, இனி இவரது ஆட்டம் அவ்வளவுதான்,


Easwar Kamal
செப் 05, 2025 22:21

40கு 0 வாங்கினீங்களே உங்களுக்கு ஆட்சி பத்தி எல்லாம் கவலை இல்லை . கட்சி மட்டும் இருந்தாலே போதும். எப்படியும் எதிர்க்கட்சி பதவி கிடைச்சுரும். தனக்கு வழக்கம்போல ஒரு 10 இருந்து 15 அடிமை சிக்குவானுங்க. அவனுங்களை வச்சு காலத்தை ஓடிப்புடலாம். உடம்புக்கு முடியலென அப்படியே கட்சியை மவன்காரன் கிட்ட தள்ளிவிட்டு போய் சேர்ந்தரலாம் அதுதானே பிளான். புரிஞ்சுருச்சு


V K
செப் 05, 2025 21:59

கடைசில மன்சூர் அலி கான்னுடன் தான் கூட்டணிக்கு வருவார்கள் போல் இருக்கு இதே நிலமை போய் கொண்டு இருந்தால் அதிமுகவுக்கு இது கடைசி தேர்தலாக இருக்கும்


GMM
செப் 05, 2025 21:45

ஏழைக்கு மனை, கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். எடப்பாடி அதிமுகவின் தேர்தல் அறிக்கை. தமிழக நிதிநிலை நிர்மூலம் ஆகும். திமுக பரவாயில்லை என்று தோன்றும். கூட்டணி கட்சிகள் கொள்கை முடிவு மாறும். எடப்பாடியை தேர்தலுக்கு முன் முதல்வர் வேட்பாளராக அறிவித்தால், கூட்டணி குழப்பம் ஏற்படும். திமுக நிர்வாகம், சட்ட ஒழுங்கு, நிதிநிலை சீர்கெட்டு உள்ளது. திமுக எதிர் அணி வென்றால் தான் சீர் செய்ய முடியும். இது போன்ற அறிவிப்புகள் கூட்டணியை வலுவிழக்க செய்யும்.


சிட்டுக்குருவி
செப் 05, 2025 21:25

ஜெயலலிதா அம்மையாரை ஜெயிலில் வைத்தது அவரை மீளாதுயருக்கு ஆளாக்கி நாள் வராமலேயே வைகுண்டம் அனுப்பிவைத்த ,அவரைபயன்படுத்தி நீதி நேர்மைக்கு புறம்பாக அளவில்லா சொத்துக்களை சேர்த்து அனுபவித்துக் கொண்டிருப்பவர்களை மீண்டும் கட்சியின் சேர்த்தால் அது அம்மையாருக்கு செய்யும் துரரோகமட்டுமில்லாமல் அவரை தெய்வமாக கொண்டாடிய தொண்டர்களின் மனதைபுண்படுத்தி கட்சியிலிருந்து விலகி போக வழிவகுக்கும் . இது கட்சியை பிளவுபடுத்தும் திராவிடக்கட்சியின் சூழ்ச்சி என்பதை இதற்க்கு துணை போவர்கள் அறியவேண்டும் .


V K
செப் 05, 2025 22:01

அதற்கு பழனிக்கு ஒட்டு போட முடியாது போ


bara Almadi
செப் 05, 2025 21:10

Correct. No need to answer about Senkottai. Fire him out of admk. Where were ttk and sasi, during JJ time. Keep them as JJ did. Don’t allow them inside AIADMK!


சங்கி
செப் 05, 2025 21:03

திருடன்


சமீபத்திய செய்தி