உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இ.பி.எஸ்., மீது வழக்குப்பதிவு செய்யலாம்: விசாரணைக்கு ஒத்துழைக்க ஐகோர்ட் உத்தரவு

இ.பி.எஸ்., மீது வழக்குப்பதிவு செய்யலாம்: விசாரணைக்கு ஒத்துழைக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 2021 சட்டசபை தேர்தலில் வேட்புமனுவில் சொத்து விவரங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., மீது வழக்குப்பதிவு செய்ய சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லும். போலீசார் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில், முன்னாள் முதல்வர் பழனிசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தாக்கல் செய்த வேட்புமனு மற்றும் பிரமாண பத்திரத்தில், சொத்து விபரங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்துள்ளதால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சேலம் நீதிமன்றத்தில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யவும், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், சேலம் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=75ca9a0o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனை எதிர்த்து இ.பி.எஸ்., தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், சேலம் நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து இருந்தது. இந்த வழக்கில் இ.பி.எஸ்., போலீசார் தரப்பு வாதங்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி வேல்முருகன், இ.பி.எஸ்., தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தலாம். விசாரணைக்கு இ.பி.எஸ்., முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Anantharaman Srinivasan
ஜன 22, 2025 20:20

4 வருடம் முடிந்தபின்அனுமதி. சும்மா சொல்லக்கூடாது .. கோர்ட்டெல்லாம் ரொம்ப சுறுசுறுப்பா தான் வேலை செய்யுது..


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 22, 2025 19:33

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார் ..... வடக்கனை வெச்சு டீம்கா கேசு போட்டதோ ???? தோல்வி பயத்தால் எடப்பாடியை ஜோலி முடிக்க குடும்பக்கட்சி திட்டமா ????


Haja Kuthubdeen
ஜன 22, 2025 19:02

அடுத்த தேர்தலும் வர போகுது...தீர்ப்பு எத்தனை வருசம் கழித்து வருமோ!!!


திகழ்ஓவியன்
ஜன 22, 2025 18:53

தவழ்ந்த பாடி நிலை ரொம்ப கவலை கிடம் தானோ , ஒரு பெண்ணால் பதவியில் உட்காரவைத்தால் அவளை யார் என்று கேட்ட பாவம் விடுமா , ஆனா அதுவும் ACCUST 2


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 22, 2025 19:35

Accused என்று இருக்கவேண்டும் .... Accust என்றால் ஆக்ரோஷமாக சவால் விடு என்றுதான் பொருள் .....


கல்யாணராமன்
ஜன 22, 2025 18:49

விசாரணை செய்து என்ன பலன் அடைய போகிறீர்கள்? அடுத்த தேர்தல் இன்னும் ஓர் ஆண்டில் வந்து விடும். வந்த பின் அல்லது சில மாதங்கள், வருடங்கள் கழித்து தீர்ப்பு வரும். எடப்பாடிக்கு எதிராக தீர்ப்பு வந்தாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. வழக்கு செலவு தண்டம். நீதிமன்றம் நேரம் வீண்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை