உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இ.பி.எஸ்.,க்கு பாராட்டு விழா: செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது ஏன்?

இ.பி.எஸ்.,க்கு பாராட்டு விழா: செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது ஏன்?

சென்னை: கோவை மாவட்டம் அன்னுாரில், இ.பி.எஸ்.,க்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கி, செயல்படுத்திய முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்.,க்கு விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் மூன்று மாவட்ட விவசாயிகள் சார்பில், நேற்று கோவை மாவட்டம், அன்னூர் அருகே கஞ்சப்பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2hcbcigz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விழாவில் அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. அவர் விழாவை புறக்கணித்து விட்டதாக, தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக செங்கோட்டையன் கூறியதாவது: விழாவை ஏற்பாடு செய்தவர்கள் மூன்று நாட்களுக்கு முன்னர் என்னை சந்தித்தார்கள். அப்போது, எங்ளை உருவாக்கிய எம்.ஜி.ஆர்., ஜெயலிதா புகைப்படங்கள் வைக்கப்படவில்லை. எங்களிடம் கூறியிருந்தால் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பேன்.என்னை வளர்த்து ஆளாக்கிய தலைவர்களின் புகைப்படங்கள் இல்லை. இந்த பணிகளுக்கு ஜெயலலிதா அடித்தளம் அமைத்துள்ளார். அவர்களின் புகைப்படங்கள் இல்லை என தெரிவித்தேன். நான் விழாவில் கலந்து கொள்ளவும் இல்லை; புறக்கணிக்கவும் இல்லை.இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: இந்த விழாவை அ.தி.மு.க., ஏற்பாடு செய்யவில்லை. பாராட்டு விழாவை விவசாயிகள் கூட்டமைப்பு தான் ஏற்பாடு செய்தது. அந்த கூட்டமைப்பில் பல்வேறு கட்சியினரும் இருக்கின்றனர். எனவே, அரசியல் கலப்பு இருக்கக்கூடாது என்பதால் தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களை வைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Smbs
பிப் 10, 2025 15:43

தலனவர்களால் கட்சி அல்ல கட்சியால் தான் தலைவர்கள் தொண்டர் மட்டுமே கட்சியின் அடிநாதம் தலைக தாவலாம் கவல இல்ல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை