| ADDED : மார் 17, 2024 04:22 AM
சென்னை : கேரளா மாநிலம் திருச்சூர், லுாலுா இண்டர்நேஷல் கன்வென்ஷன் சென்டரில், இ.எஸ்.ஏ.எப்., அறக்கட்டளை, 32வது நிறுவன தின விழாவை, இ.எஸ்.ஏ.எப்., சிறு நிதி வங்கியுடன் இணைந்து கொண்டாடியது. நாட்டின் சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்துவதில், இ.எஸ்.ஏ.எப்., வங்கியின் முக்கிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக மேற்கு வங்க மாநில கவர்னர் சி.வி.ஆனந்த போஸ், இணையவழி தகவல் வாயிலாக தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியை, கேரளா மாநில வருவாய் துறை அமைச்சர் கே.ராஜன் துவக்கி வைத்து, சிறந்த சேவைக்காக இ.எஸ்.ஏ.எப்., அறக்கட்டளையின் அர்ப்பணிப்பை பாராட்டினார். இ.எஸ்.ஏ.எப்., குரூப் ஆப் சோஷியல் என்டர்பிரைசஸ் அமைப்பின் நிறுவனர் கே.பவுல் தாமஸ் பேசியதாவது:இந்தியாவில் ஒரு முன்னணி நிதி நிறுவனமாக உருவாக வேண்டும் என்பது நிறுவனத்தின் லட்சியம்; நிதிசார் சமூக பிரிவினைகளை குறைத்து, சமூகத்தின் ஒவ்வொரு அடுக்கிற்கும் வங்கி சேவைகளை விரிவுபடுத்த வேண்டும் என்பது இ.ஏ.எஸ்.எப்.,ன் நோக்கம். 21 மாநிலங்கள், இரு யூனியன் பிரதேசங்களில் இ.ஏ.எஸ்.எப்., வங்கி சிறப்பாக செயல்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.