உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / " 10 ஆடுகள் கூடினால்கூட தலைவனை தேர்ந்தெடுக்கும் " - இண்டியா கூட்டணியை கிண்டலடிக்கும் அண்ணாமலை

" 10 ஆடுகள் கூடினால்கூட தலைவனை தேர்ந்தெடுக்கும் " - இண்டியா கூட்டணியை கிண்டலடிக்கும் அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பல்லடம்: ''10 ஆடுகள் ஒன்றுக்கூடிவிட்டால் கூட தலைவனை தேர்ந்தெடுத்து அதன் பின்னால் செல்லும்; ஆனால் இண்டியா கூட்டணியில் யார் தலைவர், யார் பிரதமர் என்றே தெரியாமல் அரசியல் செய்வதாக'' தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கிண்டலாக பேசினார்.கோவை லோக்சபா தொகுதி வேட்பாளர் அண்ணாமலை பல்லடம் பகுதியில் பிரசாரத்தில் பேசியதாவது: நான் வெற்றிப்பெற்றால் 500 நாட்களில் 100 வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன். திராவிட கட்சிகள் பணப்பேய்களை போல பித்துப்பிடித்து இருக்கின்றன. இதற்கு ஒரே தீர்வு தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரவேண்டும்; பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகள் தேசம் எந்த பாதையில் செல்ல வேண்டும் என பிரதமர் மோடிக்கு தெரியும். தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் கஞ்சா புழக்கம் இருந்து வருகிறது. அது இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்து வருகிறது. திமுக தலைவர்களுக்கு எப்படி ஆட்சி செய்வது எனத் தெரியாது. தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாத ஒருவர் முதல்வர் ஸ்டாலின். ஆனால் அவர் தமிழக மக்கள் அனைவரும் நன்றாக இருப்பதாக கூறுகிறார்.

இண்டியா கூட்டணி

ஒரு 10 ஆடுகள் ஒன்றுக்கூடிவிட்டால் கூட தலைவனை தேர்ந்தெடுத்து அதன் பின்னால் செல்லும். ஆனால் இண்டியா கூட்டணியில் யார் தலைவர், யார் பிரதமர் எனத் தெரியாமல் 6 மாதமாக அரசியல் செய்து வருகின்றனர். ஆனால் நமக்கு உலக தலைவர்களுள் ஒருவரான மோடி இருக்கிறார். அவர் நினைத்தால் போனில் பேசி போரை நிறுத்துவார். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

venugopal s
ஏப் 15, 2024 22:25

சேம் சைட் கோல் என்பது இது தானோ?


Azar Mufeen
ஏப் 15, 2024 18:12

பிரதமர் நினைத்தால் போனில் பேசி போரை நிறுத்துவார் பாவம் அவருக்குத்தான் மணிப்பூர் நம்பர் கிடைக்கமாட்டேங்கறது


Elangovan KANNAN
ஏப் 16, 2024 15:55

What Ur Saying is true


Selvakumar Krishna
ஏப் 15, 2024 17:58

சொந்த தொகுதியிலேயே சொல்வதுதான் வித்தை


mukundan
ஏப் 15, 2024 17:58

ராகுலை தலைவன் என்று சொல்லுவதற்கு பதில் இந்தியா கூட்டணி தலைவர் ஆவர்


தமிழ்
ஏப் 15, 2024 14:41

அதை இன்னொரு ஆடு சொல்வதுதான் வேடிக்கை.


திகழ்ஓவியன்
ஏப் 15, 2024 13:23

டேய் நீயே ஒரு நியமனம் இதை புரிந்து கொள் உன் தகுதி என்ன சொல்லு


R S BALA
ஏப் 15, 2024 14:15

பொதுவில் எழுதும் பொது வார்த்தைகளில் கவனம் தேவை


vijai iyer
ஏப் 15, 2024 14:21

malai anamalai


M Ramachandran
ஏப் 15, 2024 12:53

இந்த INDI கூட்டணி தலைவர்களில் பாதி பேக்ர் தெராசா விரோத கும்பலுடன் வைத்துள்ளவர்கள் நாட்டு நலம் ஐயா மாலா சொந்த விருப்பு வெறுப்பிற்கு அரசியல் உள்ளார்கள் பல நாடுகள் பிணம் தின்னி கழுகு போல் நம் அழிவை எதிர் பார்த்து காத்து கொண்டிருக்கிறர்கள் அவர்கள் எந்த அளவிற்கும் செல்ல இரூக்கிறார்கள் பணம் புகுந்து விளையாடுது அதன் தாக்கம் இந்த தேர்தலில் பிரீத்தி பலித்து கொண்டிருக்கிறது அதற்கு பலி கடா வாகா எதிர் கட்சிகளை உபயோகா படுத்தி கொண்டிருக்கின்றன


முருகன்
ஏப் 15, 2024 12:19

இதை தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர் அப்போது தானே உள்ளது உண்மை முகம் தெரியும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை