வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இல்ல உங்க அப்பா வந்தாலும் திமுக ஒன்னும் முடியாது
மேலும் செய்திகள்
'ஆட்சியை நடத்த தெரியாத பொம்மை முதல்வர் ஸ்டாலின்'
14-Oct-2025
கோவை: 'தமிழகம் தலைநிமிர தமிழரின் பயணம்' என்ற பெயரில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள நாகேந்திரன், நேற்று கோவை மாவட்டம் காரமடை தேரம்பாளையம் பகுதியில் விவசாயிகள், நெசவாளர்களை சந்தித்தார். அவரிடம் பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை முன் வைத்தனர். பின், நாகேந்திரன் பேசியதாவது:- சிறுமுகையில் மத்திய ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்; இங்குள்ள கருவேப்பிலைக்கு புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் விஞ்ஞானிகள் இங்கு வரவழைக்கப்பட்டு, வேர் வாடல் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படும். மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் மேம்பாடு கோரிக்கைகளை ரயில்வே அமைச்சரிடம் கொண்டு செல்வேன். அத்திக்கடவு - - அவினாசி திட்டத்தில் விடுபட்ட இடங்கள் சேர்க்கப்படும். கோவை என்றால் பாதுகாப்பான நகரமாக இருந்தது. அதை காவல்துறை சீரழித்துவிட்டது. பெண் குழந்தைகளின் பெற்றோர் கண்ணீர் வடிக்கின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக மாறிவிட்டது. இந்த ஆட்சி தன் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது. சொத்து வரி 300 சதவீதம் கூடியது. மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. மக்கள் இந்த ஆட்சியின் மீது வெறுப்பில் உள்ளனர். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு விஜய் வராவிட்டால், எங்கள் கூட்டணிக்கு பின்னடைவு கிடையாது. தி.மு.க., ஆட்சியை நிச்சயமாக வீழ்த்துவோம். இவ்வாறு பேசினார்.
இல்ல உங்க அப்பா வந்தாலும் திமுக ஒன்னும் முடியாது
14-Oct-2025