வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மக்கள் ஓட்டளித்து தேர்ந்து எடுத்த மக்கள் பிரதிநிதிகளை நியமன அதிகாரிகள் தகுந்த முறையில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது ஜனநாயக கடமை
அனைவருக்கும் கவுனர் பதவி கிடைத்தால் இப்பிடித்தான் பேசுவாங்க.
சென்னை : சென்னையில் நேற்று, 15வது தேசிய வாக்காளர் தின விழா நடந்தது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட, தேர்தல் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, கவர்னர் ரவி பரிசுகள் வழங்கினார்.திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி, திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் பரிசுகள் பெற்றனர். தேர்தல் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட சப் கலெக்டர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்களாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கும் பரிசுகள் வழங்கினார்.வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான சுவரொட்டி வடிவமைப்பு, கட்டுரை, வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.பின், கவர்னர் ரவி பேசியதாவது:இந்தியாவில் ஜனநாயகம் மிகவும் முதிர்ச்சி அடைந்துள்ளது. ஜனநாயகத்தை நிலைநாட்ட பலர் ரத்தம் சிந்தியிருக்கின்றனர். இன்று நகரங்களை விட, கிராமங்களில் அதிக மக்கள் ஓட்டளிக்கின்றனர். தேர்தல்களில் ஓட்டளிப்பதுதான் ஜனநாயகத்தையும், குடியரசையும் பாதுகாக்கும். எனவே, வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பது, ஓட்டளிப்பதன் முக்கியத்துவத்தை, மாணவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இதற்காக கல்வி நிலையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.எந்த தேர்தலாக இருந்தாலும், அனைவரும் கண்டிப்பாக ஒட்டளிக்க வேண்டும். பலர் 'நோட்டா'வுக்கு ஓட்டளிக்கின்றனர்.ஓட்டளிக்காமல் இருப்பதை விட, நோட்டாவுக்கு ஓட்டளிப்பதும் தேர்தல் பங்களிப்புதான்.இந்திய தேர்தல் ஆணையம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் பதிவாகும் ஓட்டு சதவீதம், உலகின் எந்த நாடும் எட்ட முடியாத இடத்தில் உள்ளது. நம் நாட்டில் நடக்கும் ஜனநாயக முறையிலான தேர்தலை யாராலும் குறை சொல்ல முடியாது.நான் ஏன் ஓட்டளிக்க வேண்டுமென நினைப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். இந்த 'டிஜிட்டல்' யுகத்தில் மக்களை ஓட்டளிக்க ஊக்குவிக்காமல், திசை திருப்புகின்றனர்.அதை நம்பி யாரும் ஓட்டளிக்காமல் இருந்து விடக் கூடாது. அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும்.பள்ளி மாணவர்களுக்கு ஓட்டளிக்கும் உரிமை இல்லாவிட்டாலும், பெற்றோர், உறவினர்களை ஒட்டளிக்க வலியுறுத்த வேண்டும். மாணவர்கள் ஓட்டளிக்கும் வயதை அடைந்தவுடன், வாக்காளர் அடையாள அட்டையை பெற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். முதலில் தேசிய கீதம்
கவர்னர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், முதலில் தேசிய கீதமும், அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவிலும் தேசிய கீதம் பாடப்பட்டது.
மக்கள் ஓட்டளித்து தேர்ந்து எடுத்த மக்கள் பிரதிநிதிகளை நியமன அதிகாரிகள் தகுந்த முறையில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது ஜனநாயக கடமை
அனைவருக்கும் கவுனர் பதவி கிடைத்தால் இப்பிடித்தான் பேசுவாங்க.