உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இனி 10ம் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

இனி 10ம் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் விருப்பப் பாடத்தின் மதிப்பெண்களும் இனி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ் அல்லாமல், மற்ற மொழிகளை விருப்ப பாடமாக எடுத்து படிக்கும் மாணவர்கள், அந்த பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டும் எனவும், அதையும் சேர்த்து அவர்களுக்கு 600 மதிப்பெண் கொண்ட தேர்வாக நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஹிந்தி, உருது, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளை விருப்ப பாடமாக தேர்வு செய்யும் மாணவர்களுக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1fy9ugth&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதாவது, 10ம் வகுப்பு மாணவர்கள் தற்போது வரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என பாடங்களுக்கு தலா 100 மதிப்பெண்கள் என 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதுகிறார்கள். இந்த ஐந்து பாடங்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சிக்கான மதிப்பெண்களாக கணக்கிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2006ம் ஆண்டு 10ம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படிக்காமலேயே மாணவர்கள் உயர்க்கல்விக்கு செல்கின்றனர்; குறைந்தபட்சம் 10ம் வகுப்பு வரையிலாவது தமிழை ஒரு பாடமாக மாணவர்கள் படிக்க வேண்டும், தேர்வெழுத வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி தமிழ் அல்லாத பிற சிறுபான்மை மொழிகளை கொண்ட மாணவர்கள் விருப்ப பாடத்தை எழுதினாலும் அதில் பெற்ற மதிப்பெண்கள் தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல் இருந்தது.

600 மதிப்பெண்

ஆனால், இனிமேல், ஹிந்தி, உருது, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளை தாய்மொழியாக கொண்ட மாணவர்களுக்கு புதிய அறிவிப்பின்படி, விருப்ப பாடத்திற்கும் தேர்ச்சி மதிப்பெண் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப பாடத்தின்படி தேர்வெழுதும் மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண் மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். அவர்கள் இனி தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களுடன், 6வதாக தனது விருப்ப மொழி பாடத்திலும் தேர்ச்சி பெற்றாக வேண்டும். அந்த மதிப்பெண்களுடன் சேர்த்து மொத்தம் 600 மதிப்பெண்களுக்கான தேர்வாக சான்றிதழில் இடம்பெறும்.மற்ற மாணவர்களுக்கு வழக்கம் போல் 5 பாடங்கள் ; 500 மதிப்பெண்கள் என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும். இந்த நடைமுறை அடுத்த கல்வியாண்டு (2024-2025) முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

rama adhavan
பிப் 16, 2024 22:01

புரியவில்லை. தமிழையும் எடுத்து மேலும் யார் விருப்பப் பாடமும் எடுப்பார்கள். பேசாமல் CBSC க்கு மாறி விடுவார்கள்.


Balaji
பிப் 16, 2024 21:51

அறிவேயில்லாதவர்கள் கையில் கல்வி.. தெய்வமே.. இன்னொரு பாடம் படிச்சி அதிலும் தேர்ச்சி பெற்று.. அப்போ அஞ்சு மட்டும் படிக்கிறவன் அதிர்ஷ்டசாலி? அப்படித்தானே? ஆறு படிக்கிறவர்கள் கணக்கில் தமிழுக்கு பதில் அவர்கள் விருப்ப மொழி மதிப்பெண்ணை எடுப்பது தானே முறையாக இருக்கும்? தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்று வேண்டுமானால் கூடுதல் விதியாக இருக்கலாமே தவிர இப்படி அவர்களுக்கு மட்டும் 600 என்பது நியாயமே இல்லை..


Karthik M
பிப் 16, 2024 19:57

அனைவருக்கும் 600 மதிப்பிற்கு exam வைக்க வேண்டும். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு மொழி கட்டாயமாக எழுத வேண்டும் (100%), மற்ற இரு மொழிகள் 50%+50% = 100% கூட்டாக எழுத வேண்டும். தமிழ் மாணாக்கர்கள் 100% தமிழும் 50% இங்கிலீஷும் வேறு எதாவது மொழியும் கர்க்க வேண்டும் ... மற்ற மாநிலத்து மாணாக்கர்கள் 100% அவங்க மொழியும், tamil english கூட்டாக (50%+50%) 100% எழுத வேண்டும். ஆக எல்லோரும் மூன்று மொழிகள் படிக்க வேண்டும் இளம் வயதில் மொழி கற்றல் வேலை தேடவும் மற்ற மாநிலத்துடன் communicate பண்ணவும் மிகவும் உதவும்


Kuppan
பிப் 16, 2024 15:33

கிளம்பாக்கம் சொதப்பல் முடிவதற்குள் அடுத்த சொதப்பல் கல்வி துறைக்கா? ஒரு சாரார் 500கும் அடுத்த சாரார் 600கும் மதிப்பெண் கணக்கிட்டு ஒரு பெரிய சொதப்பலுக்கு வித்திடுகிறார்கள் தமிழக மக்களே தயாராகுங்கள்.


ஆரூர் ரங்
பிப் 16, 2024 15:00

என்ஜினீயரிங் கலைக் கல்லூரி அறிவியல் பிரிவு சேர்க்கையிலும் ஆங்கிலம் தமிழ் மொழிப்பாட மதிப்பெண்களையும் கணக்கிலெடுத்துக் கொள்ளவும். வரவர மொழியறிவு மோசமாகி வருவதைத் தடுத்தாக வேண்டும்.


Siva Nesan
பிப் 16, 2024 14:50

திராவிட மாடல் அரசின் தகிடுதத்த வேலைகளில் பரைசாற்றுவதில் இதுவும் ஒன்று மாணவர்கள், தாங்எளாகவே மூன்றாம் மொழியை கற்க ஊக்குவிக்காமல் தடுக்கும் நடவடிக்கை என புரிந்துக் கொள்ள வேண்டும்.


Karuthu kirukkan
பிப் 16, 2024 13:51

அப்படினா , தெலுங்கு ,கன்னடம் , மலையாளம் போன்ற திராவிட மொழி பேசுபவர்களும் கண்டிப்பாக தாய் மொழியிலே பாஸ் ஆகணுமா ? ஐயோ போச்சே -ஆகா , ஆக .ஆக .. நான் சொல்லவராது ..


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை