உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை ஏரிகளில் அளவுக்கு அதிகமாக நீர் சேமிப்பு; பேரிடர் மேலாண்மை விதி மீறப்படுவதால் அதிர்ச்சி

சென்னை ஏரிகளில் அளவுக்கு அதிகமாக நீர் சேமிப்பு; பேரிடர் மேலாண்மை விதி மீறப்படுவதால் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பேரிடர் மேலாண்மை விதிகளை முறையாக பின்பற்றாமல், குடிநீர் ஏரிகளில் கூடுதல் நீரை, நீர்வளத்துறை சேமித்துள்ளதால், 2015ல் நடந்தது போல் சென்னைக்கு பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆபத்தை உணராமல், மாநகராட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில், நீர் வளத்துறையினர் செயல்படுவதாக, பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் வாயிலாக சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இவை மொத்தம், 11.75 டி.எம்.சி., கொள்ளளவு உடையவை. தற்போது, இவற்றில் 9.27 டி.எம்.சி., இருப்பு உள்ளது. அதன்படி, 3.64 டி.எம்.சி., கொள்ளளவுள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் 2.94 டி.எம்.சி.,யும், 3.30 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2.76 டி.எம்.சி.,யும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.மேலும், 3.23 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 2.38 டி.எம்.சி.,யும், 1.08 டி.எம்.சி., கொண்ட சோழவரம் ஏரியில் 0.78 டி.எம்.சி.,யும், 0.50 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட தேர்வாய் கண்டிகை ஏரியில், 0.44 டி.எம்.சி., இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. தற்போதுள்ள நீரை வைத்து, அடுத்தாண்டு வடகிழக்கு பருவமழை வரை, சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். வடகிழக்கு பருவமழை நேரத்தில், குடிநீர் ஏரிகளில் பேரிடர் மேலாண்மை விதிகளை பின்பற்ற வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய நீர்வள ஆணையம், அணைகள் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை வெளியிட்டுள்ளன. அதன்படி, வடகிழக்கு பருவமழை நேரத்தில், பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில், முழு கொள்ளளவில் இருந்து தலா, 1 டி.எம்.சி., அளவிற்கு நீர் இருப்பை காலியாக வைக்க வேண்டும். சோழவரம், தேர்வாய்கண்டிகை ஏரிகளில், மொத்த கொள்ளளவில் 25 சதவீதம் வரை நீர் இருப்பை காலியாக வைக்க வேண்டும். அப்போதுதான், நீர்ப்பிடிப்பு பகுதிகளில், 20 செ.மீ.,க்கு மேல் மழைபெய்து நீர்வரத்து அதிகரித்தாலும், ஏரியின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். கரைகள், ஷட்டர்கள் உடைதல் உள்ளிட்ட சம்பவங்களை தவிர்த்து, ஏரிகளின் கீழ்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும். ஆனால், பேரிடர் மேலாண்மை விதிகளை பின்பற்றாமல், புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில், அதிக அளவில் நீர் சேமிக்கப்பட்டு உள்ளது. கனமழை கொட்டும்பட்சத்தில், அதிகப்படியான நீரை ஒரே நேரத்தில் வெளியேற்றினால், செம்பரம்பாக்கம் ஏரியால், 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளச்சேத சம்பவங்கள் மீண்டும் நிகழும் ஆபத்து உள்ளது.இதனால், சென்னைக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.ஆனால், இந்த விதிமுறையை நீர்வளத்துறை முறையாக கடைபிடிக்கவில்லை. சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சென்னை மண்டல நீர்வளத்துறை அதிகாரிகள் இடையே ஏற்பட்டுள்ள மோதல்தான் இதற்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

'வருவாய்' குறைவை போக்க நீர்வளத்துறை ரகசிய திட்டமா?

இது குறித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது: சென்னை மண்டல நீர்வளத்துறை பராமரிப்பில் அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலையாறு, ஆரணியாறு, வெள்ளாறு உள்ளிட்ட பிரதான ஆறுகள் உள்ளன. இதுமட்டுமின்றி, சென்னையில் அரும்பாக்கம் - விருகம்பாக்கம் கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய் உள்ளிட்ட பிரதான நீர்வழித்தடங்களும் இருந்தன. இந்த கால்வாய்கள் சீரமைப்பு பணிக்கு, பல கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடுகளை தயாரித்து, நிதித்துறையின் ஒப்புதலையும் நீர்வளத்துறையினர் பெற்றிருந்தனர். நிதி ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்ட நிலையில், இரண்டு கால்வாய்களும், சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் அரசால் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. இதனால், நீர்வளத்துறையினருக்கு கிடைக்க வேண்டிய வருவாயை, நகராட்சி நிர்வாகத்துறையினர் தட்டிப்பறித்துள்ளனர். இந்த கோபத்தில் உள்ள நீர்வளத்துறையினர், சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் வெள்ள பாதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறி வருகின்றனர். ஆனால், நீர்வளத்துறை ஏரிகளில் அதிகளவு உபரிநீர் திறந்தால், அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றின் வழியாக சென்னையில் வெள்ள பாதிப்பு அதிகரிக்கும். மாநகராட்சி அதிகாரிகளுக்கு பாடம் கற்றுத்தர, இந்த ரகசிய திட்டத்தை சென்னை மண்டல நீர்வளத்துறை உயர் அதிகாரி ஒருவரின் உத்தரவின்படி, பொறியாளர்கள் கையில் எடுத்துள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.நமது நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Chess Player
அக் 30, 2025 20:58

தூர் வரவே இல்ல. தூர் வாரினால் கொள்ளளவு ஏறும்


Vasan
அக் 30, 2025 14:44

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்னும் பல ஏரிகள் அமைக்க வேண்டும். அனைத்திலும் அதிக பட்சம் 85% மிகாமல் நீர் சேமித்து வைக்கவேண்டும். வெள்ள அபாயமும் தவிர்க்கப்படும், நீர் சேமிப்பும் இருக்கும். திமுக வரும் 5 ஆண்டுகளில் இதை நிறைவேற்றும் என நம்புகிறோம்.


திகழ்ஓவியன்
அக் 30, 2025 13:20

சமூக ஆர்வலர்கள் எல்லாம் தண்ணீர் வீனா கடலில் கலக்குது அரசு என்ன செய்கிறது என்று தமிழ்நாட்டில் மட்டும் சமூக அக்கறை கொண்டவர்கள் கேட்கிறார்கள் , சேமித்து வைத்தால் இப்படி என்ன செய்வது


தலைவன்
அக் 30, 2025 11:20

ஆட்சி, அதிகாரம் தொடர குடிநீர், மின்சாரம் ,கல்வி, சுகாதாரம் ,சட்டம் ஒழுங்கு, உள் கட்டமைப்பு, போக்குவரத்து, முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்பு போன்ற அனைத்து காரணிகளும் அவசியம் என்பதை தன்னிகரில்லாத தலைவர் அறிவார். விஷமிகள் தொடர்ந்து புகார் சொல்லி கொண்டே இருந்து பொய்களை மக்கள் உண்மை என நம்ப வைக்க செயல்படுத்தும் திட்டம்தான் இது. மழை இல்லையெனில் குடிநீர் பற்றாக்குறை வைத்து புகார் சொல்ல நினைத்தவர்களுக்கு இப்போது இருக்கும் வாய்ப்பு வெள்ள நீர் விடியவில்லை என்பதாக இருக்கும் ஆனால் நேர்மாறாக இளவல் அதிக சுறுசுறுப்புடன் இந்த விஷயத்தை கையாளுவதால் எதிரிகளுக்கு பெரும் குடைச்சல் மற்றும் புகைச்சல். ஊழல் குற்ற சாட்டுகள் எல்லாம் நமத்துப்போன திரிகள்தாம். வேறென்ன செய்யலாம்.??


GUNA SEKARAN
அக் 30, 2025 13:43

நாலரை வருடங்களாக மழை நீர் வடிகால் வேலை நடக்கிறது மிக மிக மெதுவாக, சென்னையில். மற்ற நகரங்களிலும் இதே நிலைதான். உதயநிதி ராத்திரி நேரங்களில்தான் இந்த சோதனைகளையும் செய்கிறர். எந்த அணையும் ஏரிகளும் தூர் வாரப்படவில்லை


GUNA SEKARAN
அக் 30, 2025 13:44

மழை நீர்


sankar
அக் 30, 2025 16:42

ஊழல் நாற்றம் சகிக்கவில்லை - இதில் பாராட்டு பாத்திரம் வெறும் - பார்த்து படியும் அய்யா பாணபத்திர ஓணாண்டி


ஆரூர் ரங்
அக் 30, 2025 11:04

கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறுகள் மற்றும் பங்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆயிரக்கணக்கான ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், ஆறுகளில் கட்டிடக் கழிவுகளை கொட்டு வதைத் தடுக்காமல் இருக்கும் வரை வெள்ள அபாயம் நீங்காது. ஆக்கிரமிப்பாளர்கள் கட்சி ஆட்கள் என்பதால் கோர்ட் உத்தரவிட்டும் பலனில்லை. ஏரிகளை தூர்வாரும் நடவடிக்கையும் மிகவும் மெதுவாக நகர்கிறது


திகழ்ஓவியன்
அக் 30, 2025 13:57

அப்போ ஆண்டுக்கு 3000 கோடி என்று பல நூற்றாண்டுகள் கங்கைக்கு செலவு செய்து ஏன் நாரி கொண்டு இருக்கு , கங்கை எப்ப தான் புனிதம் ஆகும்


ஆரூர் ரங்
அக் 30, 2025 14:09

கூவம் மணக்க வைக்கும் திட்டம் கருணாநிதியால் துவக்கப்பட்டு 55 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போ படகிலும் உல்லாசப் பயணம் சென்றார். இப்போது உதயா அதே போல கூவத்தில் படகுசவாரி செய்து காட்டட்டும். அப்புறம் எங்கோ உள்ள கங்கையை பற்றி பேசலாம்.


Apposthalan samlin
அக் 30, 2025 10:59

மணிமுத்தாறு பாபநாசம் அணைகளை கோடை காலத்தில் காலி செய்து விடுவார்கள் திமுகவின் ஆட்சிக்கு முன்னால் இப்பொழுது தேவையான அளவு மட்டும் துரைபார்கள் இப்பொழுது அணையின் நீர்மட்டம் மணிமுத்தாறு 80 கு குறையாது அதே போல் பாபநாசம் 100 அடி இருக்கும் .


Madras Madra
அக் 30, 2025 10:42

கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனால் அங்க ஒரு கொடுமை தலை விரித்து ஆடுதாம்


veeramani
அக் 30, 2025 10:03

நீர் மேலாண்மை ....அன்றைய பாண்டிய சோழ அரசர்கள் ஏற்படுத்துக்கொடுத்த ஏரிகளையும் ஊரனைகளையும் நாம் ஒழுங்காக பராமரித்து வந்திருந்தால் எந்த பிரச்சினையும் வந்திருக்காது நீர்வளத்துறையினருக்கு ஒரு வேண்டுகோள். முதலில் வைக்கின்ற கோடையில் வைகை, கல்லணை முக்கொம்பு சாத்தனுர் பேச்சிப்பாறை மணிமுத்தாறு ஆழியாறு போன்ற அணைக்கட்டுகளை துர் வாருங்கள். சங்கதிகளை ட்ரேடஜிங் போர்ட்களை வைத்து சுத்தப்படுத்துங்கள் இதனால் அதிக அளவு நீர் சேமிக்க இயலும்


duruvasar
அக் 30, 2025 08:55

எங்க மேலாண்மையை யார் பார்ப்பது? தமிழ்நாட்டின் தாரகமந்திரமே டெவலப்மென்ட் டெவெலப்மென்ட் டெவெலப்மென்ட் மட்டும் தான். அந்த இலக்கை அடைய நாங்கள் போடுவது பேகேஜ் பேகேஜ் ஒன்று மட்டுமே.


angbu ganesh
அக் 30, 2025 12:06

அதன் தண்ணி டெவலப்மென்ட் எந்த தண்ணின்னு கேக்காதீங்க


Balaji Ramanathan
அக் 30, 2025 08:44

DURING DROUGHT PERIOD ALL THE LAKES SHOULD BE DESILTED BTO STORE MORE WATER. BUT OUR WATER CONSERVATORS NEVER FOLLOW THAT. OUR MADURANTAGAM LAKE WORK NOT Completed TILL DATE. WHAT OUR GOVT. IS DOING FOR THE PAST 4 YEARS.


புதிய வீடியோ