உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆந்திராவில் இருந்து வாங்கிவரப்பட்ட காலாவதி மெத்தனால்: சிபிசிஐடி விசாரணையில் அம்பலம்

ஆந்திராவில் இருந்து வாங்கிவரப்பட்ட காலாவதி மெத்தனால்: சிபிசிஐடி விசாரணையில் அம்பலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆந்திராவில் செயல்படாத ரசாயன நிறுவனங்களில் இருந்து காலாவதியான மெத்தனாலை புதுச்சேரி வழியாக தமிழகம் கொண்டுவரப்பட்டு, சாராயத்தில் கலந்து விற்றது சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் விற்றதாக கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, கோவிந்தராஜ் சகோதரர் தாமோதரன், சின்னதுரை உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். கள்ளச்சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி.,க்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சிபிசிஐடி.,யின் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.சின்னதுரையிடம் நடத்திய விசாரணையில், ஆந்திராவில் உள்ள செயல்படாத ரசாயன நிறுவனங்களில் இருந்து காலாவதியான மெத்தனாலை, மாதேஷ் என்பவர் வாங்கி வந்துள்ளார். காலாவதியான மெத்தனாலை, நல்ல சரக்கு எனக்கூறி சின்னதுரைக்கு விற்றுள்ளார்.இவை ஆந்திராவில் இருந்து புதுச்சேரி வழியாக பல்வேறு சோதனைச் சாவடிகளை கடந்து விற்பனைக்கு தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த காலாவதியான மெத்தனாலை சாராயத்தில் கலந்து சின்னதுரை விற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Mohan Mg
ஜூன் 21, 2024 20:08

ஏதோ ஒரு சிற்றுர் அங்கு உள்ள ஒருவர் கையிக்கு ஆந்திரா சரக்கு கிடைகுது என்றால் அந்த நெட்வொர்க்கை பிடிப்பதை விடுத்து எக்ஸ்பையர் அனதால் இறந்தார்கள் என்றால் நல்ல சரக்குக்கு சப்லை செய்து அவார்டும் நன்கொடையும் கொடுங்கள்


Suppan
ஜூன் 21, 2024 19:54

நல்ல மேதனாலோ காலாவதியான மேதனாலோ ,,இரண்டுமே அதைக் குடிக்கும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பவை. கண் பார்வை பறிபோவது முதல் இறப்பு வரை நேரிடும் . காலாவதியான மெத்தனால் என்று அரசு புருடா விடக்காரணமென்ன?. மக்களை திசை திருப்பவா ? அதைக் குடிப்பது சட்ட விரோதம். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு எதற்காக உதவி கொடுக்கிறார்கள்? அப்படிக் கொடுக்கவேண்டுமானால் சாராயத்தை விற்றவனின் சொத்தைப் பிடுங்கி கொடுக்க வேண்டியதுதானே? .


M Ramachandran
ஜூன் 21, 2024 19:19

தப்பிக்க இப்படி கண்டபடி ரீல் விட்டுகிட்டு திரிந்தால் நாயுடுவுக்கு கோர்ப்பம் வரும் அப்புறம் யேடாகூடா மாயிரும்


ஆரூர் ரங்
ஜூன் 21, 2024 19:04

ஓங்கோல் பக்கத்திலிருந்தே எல்லா ஆபத்துகளும் வருவது வருத்தமா இருக்கு.


duruvasar
ஜூன் 21, 2024 18:07

பூர்வீகத்திலிருந்து பகுந்த வீட்டிற்க்கா ?


duruvasar
ஜூன் 21, 2024 18:06

மீண்டும் விஜயவாடா துறைமுகம் தான் குற்றவாளியா ?


Senthil
ஜூன் 21, 2024 17:54

எந்த கம்பெனி இல் இருந்து வந்தது என்று கண்டுபிடித்து , expire ஆன கெமிக்கல் ஐ விற்றத்துக்காக arrest பண்ண வேண்டியது தானே


K.Muthuraj
ஜூன் 21, 2024 16:45

அவ்வளவு தான். கேஸ் முடிவுக்கு வந்துவிட்டது.


HoneyBee
ஜூன் 21, 2024 16:10

எங்க மேல தப்பு இல்லை. அந்த ஆந்திர பயல்கள் மீது தான் தவறு. இதுதான் மடை மாற்றும் வேலை


Ganapathy Subramanian
ஜூன் 21, 2024 14:57

இத்தகைய சட்ட விரோத நடவடிக்கைகளை தடுப்பதற்குத்தானே அரசும் சோதனை சாவடிகளை காவல் துறையும் இருக்கின்றன. கொலை நடக்கும் வரை வேடிக்கைபார்க்காமல் அதை நடக்க விடாமல் தடுப்பதுதானே புத்திசாலித்தனம்?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை