உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருமணம் செய்த ஆதீனம் மடத்தில் இருந்து வெளியேற்றம்

திருமணம் செய்த ஆதீனம் மடத்தில் இருந்து வெளியேற்றம்

தஞ்சாவூர்:திருமணம் செய்து கொண்ட சூரியனார் கோவில் ஆதீனத்தை, கிராம மக்கள் மடத்தை விட்டு வெளியேற்றி, மடத்துக்கு பூட்டு போட்டனர்.தமிழகத்தில் உள்ள 18 சைவ ஆதீனங்களில் ஒன்றான சூரியனார் கோவில் ஆதீனம் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 28வது மடாதிபதியாக இருப்பவர் மகாலிங்க சுவாமிகள், 54.இவர் கர்நாடகாவைச் சேர்ந்த ஹேமாஸ்ரீ என்ற பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.ஆதீனமாக இருப்பவர் எப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்பது பற்றிய சர்ச்சை கிளம்பிய போது, இதற்கு முன் இருந்த மடாதிபதிகள் திருமணம் செய்துள்ளனர் என்று மகாலிங்க சுவாமிகள் விளக்கம் அளித்தார்.இந்நிலையில், ஆதீனங்கள் ஒன்று கூடிப் பேசி இந்த விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் என்று தருமபுரம் ஆதீனம் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார். இதற்கிடையே, இன்று சூரியனார் கோவில் ஆதீன மடத்தின் முன் ஒன்று திரண்ட ஊர் மக்கள் சிலர், ஆதீனத்துக்கு எதிராக முழக்கமிட்டனர். திருமணம் செய்து கொண்டதால் நீங்கள் மடத்தில் இருக்கக் கூடாது என்று கூறி, ஆதீனத்தை வெளியேற்றி மடத்துக்கு பூட்டு போட்டனர்.இதையடுத்து ஆதீனம் மகாலிங்க சுவாமிகள், அதே ஊரில் இருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்தில் உட்கார வைக்கப்பட்டார். ஆதீனத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் இரண்டு தரப்பினர் வாக்குவாதம் செய்து கொண்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Balasubramanian
நவ 13, 2024 19:42

நாளைய மடாதிபதிகள் ஆக விருக்கும் குட்டித் தம்பிரான்கள் என்று அழைக்கப்பட்ட தன்னுடன் படித்த சில மடத்து ஆதீனர்கள் கல்யாணம் செய்து கொண்டு மடத்து பதவியை துறந்தார்கள் என்று தமிழ் தாத்தா மகாமகோபாத்தியாய திரு உ.வே. சாமிநாதய்யர் தாம் எழுதிய கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார் .


Nellai Ravi
நவ 13, 2024 14:41

அவர் துறவறத்தை விட்டு இல்லற வாழ்க்கையில் ஈடு பட முடிவு செய்து இருக்கிறார். இதில் தவறுஎதும் இல்லை. அந்த மடத்தின் அதிபர், சன்யாசி ஆஹா தான் இருக்க என்றும்ந என்றால் மடத்தை விட்டு வெளியேற வேண்டும். கபட சந்நியாசியாக இருப்பதை விட திருமணம் புரிவது தான் சரி.


ஆரூர் ரங்
நவ 13, 2024 11:37

வாரிசு நியமனத்தின் முதல் படி


kulandai kannan
நவ 13, 2024 10:29

சீமான், கருணாநிதி வரலாறுகளை படித்திருப்பார் போலும்.


Rajarajan
நவ 13, 2024 06:56

ஓ, இதுதான் தப்பியது தம்பிரான் புண்ணியமோ?


RAMAKRISHNAN NATESAN
நவ 13, 2024 06:43

அவருக்கு மட்டும் ........


Smba
நவ 13, 2024 02:43

புத்தி இல்லாத ஆதீனம்


தாமரை மலர்கிறது
நவ 13, 2024 00:27

சாமியார் என்பவர் முற்றிலும் துறந்தவர். ஆனால் இந்த திராவிட சாமி கல்யாணம் பண்ணிக்கிட்டு சுகபோக வாழ்க்கை வாழ்ந்துகிட்டு சாமியார் வேஷம் போடறார் .வெளியே தள்ளுங்க. உழைச்சு வாழட்டும்.


பாலா
நவ 12, 2024 23:45

திராவிடியக் கட்டுமரத்தின் மரபணு இவருக்கும்.


Raja
நவ 12, 2024 23:35

கிராம மக்களா இல்லை திராவிடிய உண்டியல்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை