உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை - கோவை, நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை - கோவை, நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை: சென்னை சென்ட்ரல் -- கோவை, எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் உட்பட எட்டு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.* சென்னை சென்ட்ரல் -- கோவைக்கு செவ்வாய்தோறும் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில், பிப்., 6 முதல் 27 வரையும் நீட்டிக்கப்படுகிறது.* சென்னை சென்ட்ரல் -- ஒடிசா மாநிலம் புவனேஸ்வருக்கு திங்களில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில், வரும் 5ம் தேதி முதல் ஏப்., 29 வரையும்; புவனேஸ்வர் -- சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில், 6ம் தேதி முதல் ஏப்., 30 வரையும் நீட்டிக்கப்படுகிறது* சென்ட்ரல் -- கர்நாடகா மாநிலம் மைசூருக்கு புதனன்று இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில், வரும் 7ம் தேதி முதல் மார்ச் 27 வரை நீட்டிக்கப்படுகிறது* எழும்பூர் -- நாகர்கோவிலுக்கு வியாழனன்று இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில், இன்று முதல் மார்ச் 28வரை நீட்டித்து இயக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை