விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் ஒரே நாளில் 50 செ.மீ., அதி கனமழை பதிவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
விழுப்புரம்: பெஞ்சல் புயல் கரை கடந்த நிலையில் தமிழகத்திலேயே மிக அதிக அளவாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் ஒரே நாளில் 50 செ.மீ., மழை கொட்டியுள்ளது. வங்கக்கடலில் உருவாகியிருந்த பெஞ்சல் புயல் நேற்று நள்ளிரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. புயலின் தாக்கத்தால் சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. விழுப்புரம் மாவட்த்திலும் விக்கிரவாண்டி, திண்டிவனம், வானூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் மிக அதிக மழை அளவாக 50 செ.மீ மயிலத்தில் பதிவாகி உள்ளது