உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளுங்கள்: 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளுங்கள்: 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளுங்கள் என 10ம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனது அருமை மாணவச் செல்வங்களே. ஆல் தி பெஸ்ட். நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதி செய்யுங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

hari
மார் 25, 2024 15:49

கேளுங்கப்பா........


R Kay
மார் 25, 2024 15:26

I faced my examinations too like that throughout my school and college life Only the ones who corrected my answer sheets suffered anxiety


வாசு
மார் 25, 2024 15:21

போதைப்பொருள் வழக்கில் பதட்ட படாம இருந்தால் அப்பறம் மற்றவருக்கு அறிவுரை சொல்லலாம் ....


raja
மார் 25, 2024 15:12

தேர்வா!?


Loganathan Kuttuva
மார் 25, 2024 14:26

good advice to th students appearing in exam


கண்ணன்,மேலூர்
மார் 25, 2024 14:21

நீட் தேர்வு... அதை வைத்துதான் நாங்க அரசியல் பண்ண முடியும்.


சூரியா
மார் 25, 2024 13:10

பரீட்சை கஷ்டம் என்று யாராவது தற்கொலை செய்துகொண்டால், நாங்கள் முதல் கையெழுத்திலேயே தேர்வுகளை இரத்து செய்கிறோம்.


S SRINIVASAN
மார் 25, 2024 13:02

பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை பின்பற்றி மாணவர்களை வாழ்த்திய திராவிட மாடலுக்கு நன்றிகள்.


ko ra
மார் 25, 2024 12:45

இதிலேயும் மோடி யை பார்த்து காபி.


Venkatesh Sagadevan
மார் 25, 2024 11:41

adha avanga parthukuvaanga


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ