உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ள நோட்டு அச்சடித்த விவகாரம்; மாஜி விசிக நிர்வாகி கூண்டோடு சுற்றிவளைப்பு!

கள்ள நோட்டு அச்சடித்த விவகாரம்; மாஜி விசிக நிர்வாகி கூண்டோடு சுற்றிவளைப்பு!

கடலூர்: கள்ள நோட்டு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மா.ஜி., விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி செல்வம் ஒரு மாதத்திற்கு பின் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகள் ஆறு பேரும் போலீசாரிடம் சிக்கினர்.கடலூர் திட்டக்குடி அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், வயது 39. விசிக கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக செயல்பட்டு வந்தார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் கொட்டகை அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு கள்ள நோட்டு அச்சடிக்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த மார்ச்சில் ராமநத்தம் போலீசார் சோதனை நடத்தினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oblpqj07&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது தோட்டத்து வீட்டில் இருந்த செல்வம் போலீசை கண்டு தப்பி ஓடினார். கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம், வாக்கி டாக்கிகள், அச்சடிக்கும் பேப்பர், 83,000 ரூபாய் ரொக்க பணம் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ராமநத்தம் செல்வம் அவரது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்தனர்.இதையடுத்து செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுகிறார் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.இது ஒரு புறம் இருக்க கள்ளநோட்டு கும்பலை சுற்றிவளைக்க கடலூர் போலீசார் தீவிரம் காட்டினர். சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கும் மேலாகியும் தலைமறைவாக இருந்த செல்வத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து செல்வத்தின் உறவினர்களை போலீசார் கண்காணிக்க ஆரம்பித்தனர். செல்வத்தின் உறவினர் ஒருவர் அடிக்கடி கர்நாடகாவில் உள்ளவர்களுடம் பேசி வருவது தெரியவந்தது. விசாரணையை துரிதப்படுத்திய போலீசார் செல்வம் கர்நாடகாவில் பதுங்கி இருப்பதை உறுதி செய்தனர். கர்நாடகா விரைந்த தமிழக போலீசார் அங்கு பதுங்கி இருந்த செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Pandi Muni
மே 03, 2025 12:26

தமிழ்நாடு மிக கேவலமான நாடாகிப்போனது .


ராமகிருஷ்ணன்
மே 03, 2025 04:08

ஓட்டுக்காக பணம் தரணும், அதற்காக கள்ளநோட்டு தயாரிக்க குருமா உத்தரவு கள்ள பணத்தை வாங்கிய வாக்காளர்களை போலீஸ் பிடித்து கேட்டால் ஓட்டுக்காக வாங்கினேன் என்று சொல்ல முடியாது அல்லவா. குருமாவின் குயுக்தி திட்டம்.


theruvasagan
மே 02, 2025 22:03

ஸ்வீட் பாக்ஸ்ல வந்தது பத்தலையாம். அதனால சுயசார்பு திட்டத்துல இறங்கிட்டாங்க.


Raghavan
மே 02, 2025 22:01

இவன் எவ்வளவு நாட்களாக கள்ள நோட் அச்சடித்து கொண்டுஇருக்கிறான் என்பது தெரியவில்லை. ஒருவேளை தலைவருக்கும் ஒரு 50 விழுக்காடு சென்று இருக்குமோ என்னமோ யார் கண்டது. அடிக்கிற அடியிலும் கொடுக்கிற உதையிலும் எல்லாவற்றையும் சொல்லிவிடுவான். இவன் சொல்லாவிட்டாலும் கூட இருந்தவர்கள் சொல்லிவிடுவார்கள்.


Vijay
மே 02, 2025 20:23

திமுக கூட்டணி வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு


sankaranarayanan
மே 02, 2025 19:07

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் போராக மாறக்கூடாது என்று சூளுரைப்பவர் கள்ள நோட்டு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மா.ஜி., விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி செல்வம் கைது செய்யப்பட்டது பற்றி பேச அவருக்கு வாய் இல்லையோ? ஆளையே காணோமே...


murugan
மே 02, 2025 18:09

கஞ்சா விற்பதிலும் விசிக பிரமுகர்கள் முன்னிலை.


RAINBOW
மே 02, 2025 17:47

தலைவர் இது கூட தெரியாமலா இருந்திருப்பார். விசிக இள வட்டங்கள் அனைத்து சமூக விரோத நடவடிக்கைகளிலும் உள்ளனர்


jothi.n
மே 02, 2025 16:54

திருமா உடனே பதவி விலக வேண்டும், மேலும் இந்த குருமாவையும் நல்லா விசாரணை செய்ய வேண்டும்,


பா மாதவன்
மே 02, 2025 16:24

ஒரு விசிக மாவட்ட தலைவர் பொறுப்பு அந்தஸ்தில் உள்ள ஒரு பெண்மணி 3 பவுன் தங்க செயின் திருடி சென்றதாக 2 நாட்கள் முன்பு செய்யப்பட்ட புகாரில் கைது. இன்று கள்ள நோட்டு அடித்த விவகாரத்தில் ஒரு விசிக முக்கிய பிரமுகர் கைது. இத்தனைக்கும் தோழமை கட்சி ஆட்சி அதிகாரத்தில் செயல் பட்டவர்கள் இத்தனை அதிகார செல்வாக்கிலும் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள் என்றால் , செல்வாக்கு, அதிகாரம் இல்லையெனில் இன்னும் எத்தனை பேர் மாட்டக் கூடிய நிலை வரும் என்பது யாருக்கு தெரியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை