உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலி பணி நிறைவு சான்று நிர்வாகத்துறை எச்சரிக்கை

போலி பணி நிறைவு சான்று நிர்வாகத்துறை எச்சரிக்கை

சென்னை:நகராட்சி நிர்வாகத்துறை பிறப்பித்துள்ள உத்தரவு: பொது கட்டட விதிகளின்படி, கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் பெறுவது கட்டாயம். இதில், உரிய அதிகாரிகளை தவிர்த்து வேறு நபர்கள் பெயரில் வழங்கப்பட்ட பணி நிறைவு சான்றுகளை சிலர் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.இதை பயன்படுத்தி, மின்சாரம், குடிநீர் போன்ற சேவை இணைப்புகளை பெறுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், தவறாக சான்று வழங்கியதாக கூறப்படும் அதிகாரிகள், போலி சான்றிதழ்களை பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.அதே நேரத்தில், உரிய காலத்தில் முறையாக வழங்க வேண்டிய பணி நிறைவு சான்றிதழ்களை தாமதிக்க கூடாது. வேண்டுமென்றே இதை தாமதிக்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி