வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பிஜேபி ஆட்சி செய்யும் மாநிலங்களில் இப்படி பட்ட சம்பவம் நடந்தபோது பிஜேபி என்ன என்ன பண்ணியது அதுதான் இங்கயும் நடக்குது, அஸ்வத்தாமன் போன்ற மூர்க்கனுக்கு பேசாமல் இருக்கும் வேலைதான் சரியாக இருக்கும்,
சென்னை: தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன் அறிக்கை:அண்ணா பல்கலையின் பாலியல் கொடூர விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு போராடிய அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் அமைப்பின் மாநில செயலர் யுவராஜ் மற்றும் அலுவலக செயலர் ஸ்ரீதர் ஆகியோரை, திராவிட மாடல் போலீஸ் நள்ளிரவில் கைது செய்துள்ளது.குற்றம் செய்தவர்கள் அனைவரையும் கைது செய்யாமல் காலம் கடத்தும் போலீஸ், அதை வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்களை கைது செய்வது என்ன மாதிரியான நடவடிக்கை? இது தான், திராவிட மாடல் போலீசின் செயல்பாடு என்றாகி விட்டது. இப்படி கைது செய்த ஏ.பி.வி.பி., நிர்வாகிகளை, உடனடியாக நீதிபதி முன் நிறுத்தவில்லை. அவர்களை பல மணி நேரம் அலைக்கழித்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழக பாலியல் சுரண்டல் விவகாரம் நாடு முழுதும், தி.மு.க., அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலை சம்பவத்துக்குப் பின், தமிழகத்தில் பெண் பிள்ளைகளின் பெற்றோர் அனைவரும் ஒருவித அச்சத்திலும், வேதனையிலும் உள்ளனர்.எத்தனை நாளைக்குத்தான், நீதிகேட்டு போராடுவோரையே பொய் வழக்கில் தமிழக போலீஸ் கைது செய்யும்?அண்ணா பல்கலையில் தி.மு.க., பிரமுகரால் பாதிக்கப்பட்ட மாணவிக்காக, யாரும் குரல் எழுப்பக்கூடாது என அச்சமூட்டுவதற்காகவே, ஏ.பி.வி.பி.,யினரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசமான செயலை இனியாவது நிறுத்த வேண்டும். பொய் வழக்கை ரத்து செய்யவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிஜேபி ஆட்சி செய்யும் மாநிலங்களில் இப்படி பட்ட சம்பவம் நடந்தபோது பிஜேபி என்ன என்ன பண்ணியது அதுதான் இங்கயும் நடக்குது, அஸ்வத்தாமன் போன்ற மூர்க்கனுக்கு பேசாமல் இருக்கும் வேலைதான் சரியாக இருக்கும்,