உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக அரசின் நிர்வாக திறமை இன்மையால் விவசாயிகள் பாதிப்பு: ஆய்வுக்கு பின் நயினார் குற்றச்சாட்டு

தமிழக அரசின் நிர்வாக திறமை இன்மையால் விவசாயிகள் பாதிப்பு: ஆய்வுக்கு பின் நயினார் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: '' தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்,'' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடியில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார். நெல் பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a2lz1b2n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: ஏராளமான நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்து உள்ளன. இதற்கு தமிழக அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். மத்திய அரசு மீது தமிழக உணவுத்துறை அமைச்சர் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.தமிழக அரசு இந்த ஆண்டு தீபாவளிக்கு டாஸ்மாக்கில் இவ்வளவு மதுபாட்டில் விற்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்பட்டது. டாஸ்மாக்கில் காட்டிய அக்கறையை விவசாயிகள் பிரச்னையில் அரசு காட்டவில்லை. தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

திகழ்ஓவியன்
அக் 25, 2025 18:44

கரூர் சிபிஐ குற்ற பத்திரிக்கை அரசு செய்த அதே முதல் குற்றவாளி மதியழகன் , இரண்டாவது புஸ்ஸி ஆனந்த , மூன்றாவது லாட்டரி ஆதவ் நான்காவது நிமல் குமார் இப்போ ஏன் யாரும் கூவ வில்லை இதற்கு ஜோசப் சிபிஐ வேண்டும் என்று கேட்டார் , பனையூர் பண்ணையார் நிலை கவலைக்கிடம் தான் போல


Vasan
அக் 25, 2025 18:15

நிர்வாக திறமையற்ற குன்றிய அரசின் ஆட்சியை கலைக்காமல் நீடிக்க விட்ட திறமையற்ற ஒன்றிய அரசு என்றும் புரிந்து கொள்ளலாம்.


சிட்டுக்குருவி
அக் 25, 2025 17:22

அதிகாரிகள் கடமையை செய்யதவறுவதும் அதனால் மக்களுக்கோ அரசுக்கோ நஷ்டம் ஏற்படுத்துவதும் அவர்கள் பதவிப்பிரமாண சட்டத்தின் படி கிரிமினல் குற்றமாகும் .அவர்கள் நீதிமன்றம் மூலம் நடவடிக்கைஉட்படுத்தப்பட்டு தண்டனைக்குரியவர்களாவர் .இந்த நெல்கொள்முதல் குளுருபடி குற்றநடவடிக்கைக்கு உகந்தது .யாராவது பூனைக்கு மணிக்கட்ட முன்வரவேண்டும் .ஒருமுறை இது நடந்தால் வருங்காலங்களில் இதுபோன்ற தவறும் நடக்காது .


Shankar C
அக் 25, 2025 18:52

அதிகாரிகளை வழி நடத்துபவர்கள் யார்?


T.sthivinayagam
அக் 25, 2025 16:21

மழைக்காலம் இப்போது தான் ஆரம்பிக்குது இன்னும் இரண்டு மாதங்கள் வரை மழைக்காலம் இருக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவிக்கப்பட்டது ஆனால் அதற்குக்குள் இத்தனை தேர்தல் நேர அலப்பறையா என தொண்டர்கள் கூறுகின்றனர்.


vivek
அக் 25, 2025 16:56

தொண்டர்கள் யாரும் கூறவில்லை...சிவநாயகம் வாடகை வாய் தான் அப்படி கூறுகிறது...


சாமானியன்
அக் 25, 2025 15:24

அதிகாரிகள் மழை பெய்யாத இடங்களில் கொள்முதல் செய்து விட்டு ( சென்ற வருட விடியோ ) அதையே சன்டீவியிலும், கலைஞர் டீவியிலும் திரும்ப திரும்ப காட்டி செய்தி போடுகிறார்கள். மற்ற டீவிக்களில் கப்சிப். சுத்தமாக கொள்முதல் ஆரம்பிக்கவே இல்லை. மீடியா ஜால்ரா பலத்தை வைத்து எத்தனை நாள் அரசு வண்டி ஓட்டுவார்கள் என்பதையும் பார்ப்போம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை