| ADDED : டிச 28, 2025 02:20 AM
இயற்கை சீற்றத்தின்போது, பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், வன விலங்குகளால் பயிர் சேதம் ஏற்பட்டாலும் இழப்பீடு வழங்கும் வகையில், பயிர் காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தீர்களே, செய்தீர்களா ஸ்டாலின்? 'பச்சை துண்டு போடும் போலி விவசாயி நானல்ல' என, விவசாயிகளின் காவலர் போல் முன்னிறுத்தி கொள்ளும் நீங்கள், பயிர் காப்பீட்டில் அலட்சியம் காட்டுவது ஏன்? பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்பையும் வகைப்படுத்தி, காப்பீடு வழங்கும் வேளையில், தாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஏன் தயக்கம் காட்டுகிறீர்கள்? தங்களது அலட்சியத்தால், விவசாய நிலங்கள் வன விலங்குகளால் சூறையாடப்படுவதும், அதை தடுக்க மின் வேலி அமைக்க முயன்று, விவசாயிகள் பலியாவதும் தொடர் கதையாகி வருகிறது. தி.மு.க., அரசு எனும் கள்ளிச்செடியை விவசாயிகள் விரைவில் களைந்தெறிவர். - நயினார் நாகேந்திரன் தலைவர், தமிழக பா.ஜ.,