உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு; உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றார் தருமை ஆதீனம்

பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு; உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றார் தருமை ஆதீனம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தால் கட்டித் தரப்பட்ட மகப்பேறு மருத்துவமனை இடிக்கப்படாது என்ற நகராட்சி ஆணையரின் கடிதத்தை தொடர்ந்து, உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அறிவித்தார்.மயிலாடுதுறை, சின்னக்கடை வீதியில், பொதுமக்களின் மருத்துவ வசதிக்காக, தருமபுரம் ஆதீனம் சார்பில் இலவச மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, 24வது குருமஹா சன்னிதானம் சண்முகதேசிக சுவாமிகள், 1943ல் அப்போதைய கவர்னரை அழைத்து பூமி பூஜை செய்தார். கட்டுமான பணிகள் முடிந்து, 25வது குருமஹா சன்னிதானம், 1951ல் இலவச மருத்துவ சேவையை துவக்கி வைத்தார். மயிலாடுதுறை நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் அதிகளவில் சிகிச்சை பெற்றனர். முக்கியமாக மகப்பேறு சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர், நகராட்சி நிர்வாகத்திடம் மருத்துவமனை ஒப்படைக்கப்பட்டு, 25 ஆண்டுகளுக்கு மேல் பராமரிக்கப்பட்டு வந்தது. கட்டடம் சிதிலமடைந்ததை அடுத்து கூறைநாடு பகுதியில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு, அங்கு இடமாற்றம் செய்யப்பட்டது. சண்முக தேசிக சுவாமிகள் இலவச மருத்துவமனை கட்டடம் மூடப்பட்டு பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது.உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் அந்த கட்டடம் பழுதடைந்தது. இதனையடுத்து அந்த கட்டடத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தருமபுரம் ஆதினத்தின் 27 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யா சுவாமிகள் சார்பில் நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.இதற்கு பதில் வராத நிலையில் அந்த கட்டடத்தை இடிக்கப் போவதாக தகவல் வந்தது. இதனையடுத்து முன்னார் அமைத்த நினைவு அமைப்பை சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து காப்போம். என ஆதினம் கூறியிருந்தார். இதன் பிறகு அந்தக் கட்டடம் இடிக்கப்படுவது நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது, கட்டடத்தை நகராட்சி நிர்வாகம் இடிக்கப்போவதாக தகவல் வெளியானதால் தருமை ஆதீனம் கோபம் அடைந்தார். இலவச மருத்துவமனையை இடிப்பதை கண்டித்து, ''உயிர் போகும் வரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்,'' என, நேற்று தருமபுரம் ஆதீனம் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று (அக் 08) மகப்பேறு மருத்துவமனை இடிக்கப்படாது என்ற நகராட்சி ஆணையரின் கடிதத்தை தொடர்ந்து, உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

r.thiyagarajan
அக் 08, 2025 01:11

We support aadhinam …corporation spoiled the important place for the public free utilization given by aadhinam and misused by the corporation and govt.,, better return to aadhinam will be good ..or have to face consequences from public…


மணிமுருகன்
அக் 08, 2025 00:26

ஆதீனம் அவர்களுக்கு வணக்கம் மக்கள் உங்கள் பக்கம்


adalarasan
அக் 07, 2025 22:18

எதுவாக இருந்தாலும் மடாதிபதியிடம் கலந்து ஆலோசித்து புரிதலோடு அரசாங்கம் புதிப்பிப்பது நல்லது.அதே purpose க்கு உபயோகிக்க வேண்டும். கடைகள் கட்டப்படாது.


sankaranarayanan
அக் 07, 2025 20:46

புது கட்டிடத்தை கட்டுவார்கள் பிறகு அங்கே ஒரு மூலையில் சிறிய சாராயக்கடியை திறப்பார்கள் இது மக்களுக்கு வேண்டுமா சொல்லுங்கள்


தமிழ்வேள்
அக் 07, 2025 20:39

ஒரு சன்யாசியின் மனம் நோகும் படி செய்து, அதனால் அவரது உயிருக்கு ஏதேனும் ஊறு நேர்ந்தால், திராவிட கும்பலில் அதற்கு காரணமாக இருந்தவன் குலம் வாரிசின்றி அழியும்.. இருப்பிடம் கழுதை ஏர் பூட்டி உழுது பின்னர் பேய்க்கடுகு விதைக்கப்பட்டது போல அழிவது மட்டுமின்றி, அவன்களை ஆதரித்த மண்ணும் மக்களும் நாய் படாதபாடு பட்டு அடிமை வாழ்வு வாழப் போவதும் உறுதி... திராவிஷத்துக்கு மரணகாலம் அண்மித்து விட்டது போலும்


Venugopal S
அக் 07, 2025 19:39

எண்பது வருட பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டுவதில் என்ன பிரச்சினை உள்ளது என்று புரியவில்லை!எல்லா விஷயங்களிலும் தமிழக அரசை எதிர்ப்பது அறிவார்ந்த செயல் இல்லை!


V Venkatachalam
அக் 07, 2025 20:12

அறிவார்ந்த செயல் இல்லைன்னு சொல்றதே புண்ணாக்குதனமா இருக்கு. இடித்து விட்டு கட்டடம் கட்டினால் அதுல காசு பாக்கலாம். திராவிட மூடல் அதுக்கு தானே மடை மாத்துரானுங்க. ஆதீனத்திடம் ஒப்படைச்சுட்டா காசு பாக்க முடியாதே.


MARUTHU PANDIAR
அக் 07, 2025 20:34

அப்படியா பலே பலே .பேஷ் பேஷ் வேணு.


rama adhavan
அக் 07, 2025 21:07

யார் தற்போதைய உரிமையாளர்? அரசா மடமா?


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
அக் 07, 2025 18:54

திராவிட விஷ விருட்சத்தை வேரோடு அழிக்க வேண்டும்.


திகழ்ஓவியன்
அக் 07, 2025 19:19

தருமபுரம் ஆதினத்தின் 1943 ம் ஆண்டு சிதிலமடைந்த இடம் .


rama adhavan
அக் 07, 2025 18:34

இப்போது மருத்துவமனை நிலம், கட்டிடம் யாருக்கு சொந்தம்? மடத்துக்கு என்றால் சட்டப்படி திருப்பி பெற நடவடிக்கை இதுவரை எடுத்து இருக்கலாமே? செய்ததா?


ஆரூர் ரங்
அக் 07, 2025 18:33

நிர்வாகம் செய்ய மட்டுமே அரசிடம் ஒப்படைத்தனர். கட்டிடத்தை இடிக்கும் உரிமையை அளிக்கவில்லை என நினைக்கிறேன். ஆதீனமே எடுத்து நடத்தினால் சிறப்பு.


M Ramachandran
அக் 07, 2025 18:17

அமைதி மார்க்கம் கும்பல் இந்த திருட்டு திராவிட காலத்தில் தான் செழிப்படைந்து கோவை எஙகெங்கும் காணினும் குண்டு வெடிப்படா என்று ஆனந்த பட்டு கொண்டிருக்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை